அஜித்தின் "ஆரம்பம்" படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் பெங்களூருவைச் சேர்ந்த அக்ஷரா கவுடா. அதன் பின்னர் ஜெயம் ரவியின் "போகன்" படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தார்.
வில்லியாக வந்து தல அஜித்தையே மிரட்டிய அக்ரஷா கவுடா, கவர்ச்சி போட்டோ ஷூட்கள் மூலம் ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.பிக் பாஸ் புகழ் சினேகனின் உயர்திரு 420 படம் மூலம் நடிகையானவர் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த அக்ஷரா கவுடா.
விஜய்யின் துப்பாக்கி, அஜித்தின் ஆரம்பம், போகன், மாயவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அக்ஷரா தமிழ் தவிர்த்து இந்தி, தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
லாக்டவுனுக்கு முன்பு அவர் கார்த்திக் ராஜுவின் இயக்கத்தில் சூர்ப்பணகை படத்தில் நடித்து வந்தார்.சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், கோலிவுட்டின் டாப் ஸ்டார்களான அஜித், விஜய் பற்றி பேசியது பரபரப்பை கிளப்பியது.
அதில் துப்பாக்கி படத்தில் நடித்தது எதிர்பாராதது. அப்போது நான் மும்பையில் இருந்தேன்.அதனால் அந்த படத்தில் நடித்தேன். ஆனால் அந்த படத்தில் நடித்ததற்காக வருத்தப்படுகிறேன். ஏனென்றால் முதலில் என்னிடம் காஜல் அகர்வாலுக்கு தோழி என்று தான் சொன்னார்கள்.
ஆனால் படத்தில் அப்படி இல்லை. இருந்தாலும் அதற்காக நான் கோபப்படவில்லை. துப்பாக்கி படத்தில் எனக்கு நடந்த ஒரு நல்லவிஷயம் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய், சந்தோஷ் சிவன் ஆகியோரது அறிமுகம் கிடைத்தது தான் என தெரிவித்தார்.
நான் எத்தனை படங்களில் நடித்தாலும் என்னை ஆரம்பம் பட நடிகை அல்லது ஸ்டைலிஷ் தமிழச்சி என்று தான் அனைவரும் அழைக்கிறார்கள். என்னை போன்ற பெண்களை கவர்ச்சியான கதாபாத்திரம் அல்லது ஒரு பாட்டுக்கு குத்து டான்ஸ் ஆட மட்டுமே அழைக்கிறார்கள் என வேதனையுடன் கூறியுள்ளார்.


