இந்த முறையாவது இந்த படத்தின் தலைப்பு கிடைக்குமா..? - தீவிர முயற்சியில் இயக்குனர்..!


தளபதி விஜய் அடுத்து முருகதாஸ் உடன் கூட்டணி சேர்ந்து தனது 65ஆவது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் பற்றி பல்வேறு தகவல்களும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருக்கிறது. 
 
இந்த படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்பது பற்றி உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவல் தற்போது உலா வருகிறது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் விஜய் ஏற்கனவே நடித்து முடித்து விட்டார். 
 
படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக மார்ச் மாதம் நடைபெற்றது. படம் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாக இருந்த சூழ்நிலையில் கொரோனா பிரச்சனை நாடு முழுவதும் வெடித்ததால் தியேட்டர்கள் மூடப்பட்டு விட்டன. 
 
இதனால் மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகவில்லை. மீண்டும் சகஜ நிலை திரும்பி எப்போது இந்த படம் வெளியாகும் என்று தான் விஜய் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த வருட தீபாவளி அல்லது அடுத்த வருட பொங்கலுக்கு மாஸ்டர் படம் வெளியாக வாய்ப்புள்ளது என தயாரிப்பாளர் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். 
 
மீண்டும் ஏ.ஆர். முருகதாஸும் விஜய்யும் இணைகிறார்கள் என்ற உடனே ரசிகர்களின் எதிர்பார்ப்பு துப்பாக்கி 2 படம் ஆரம்பிக்கப் போகிறது என்று தான் இருந்தது. 
 
பிகில் படத்தின் இசை வெளியிட்டு விழா வீடியோவை பார்த்து விட்டு ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் போட்ட ட்வீட்டும், ரசிகர்கள் மத்தியில் துப்பாக்கி 2 படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்தது. 
 
நேற்று முதல் சினிமா ஷூட்டிங்கை 75 நபர்களை கொண்டு நடத்த அரசு அனுமதி அளித்து இருக்கும் சூழ்நிலையில் சினிமாத் துறை விரைவில் சகஜ நிலைக்குத் திரும்பும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். 
 
அதனால் தளபதி 65 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அண்ணாமலை படம் நடிகர் விஜய்க்கு ரொம்பவே பிடித்த படம். இளைய தளபதி என்ற டைட்டில் மாறி தற்போது தளபதி ஆகியுள்ள நடிகர் விஜய்யின் 65வது படத்திற்கு ‘தளபதி' என்ற டைட்டிலையே வைக்க ஏ.ஆர். முருகதாஸ் முயற்சி செய்து வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
தளபதி 65 படத்தின் டைட்டில் தளபதி என வைக்கப்பட்டால் செம பக்காவாக இருக்கும் என விஜய் ரசிகர்கள், அந்த தகவல் கிடைத்ததும் உற்சாகத்தில் குதித்து வருகின்றனர். 
 
நடிகர் விஜய் அந்த டைட்டில் வைக்க சம்மதிப்பாரா? என்றும், இந்த படத்திற்கு அந்த டைட்டில் வைக்கப்பட்டால்? சர்கார் போல மற்றொரு அரசியல் படமாக உருவாகுமா? என்ற பல கேள்விகளும் எழுந்துள்ளன.என்ன நடக்க போகின்றது என்பதை பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும்.