"தமிழ் ராக்கர்ஸ்"-ஐ அக்கு வேர் ஆணி வேறாக பிச்சு போட்ட "அமேசான்" - பின்னணியில் நடந்த பரபரப்பு சம்பவம்..!


கடந்த பத்து ஆண்டுக்கும் மேலாக தமிழ் சினிமா மட்டுமில்லாமல் உலக சினிமாவுக்கே தண்ணி காட்டி சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வந்தது தமிழ்ராக்கர்ஸ் இணையதளம். ஒரு தளத்தை முடக்கினால் வேறொரு TLD-யுடன் அடுத்த நிமிடமே வெளியாகும். 
 
இப்படி, பீனிக்ஸ் பறவை போல மிரட்டி வந்த தமிழ்ராக்கர்ஸின் ஆட்டத்தை அடக்கியுள்ளது முன்னணி OTT தளமான அமேசான் ப்ரைம் நிறுவனம். OTTயில் வெளியாகும் படங்களை அப்படியே லவட்டி HD தரத்தில் பதிவேற்றம் செய்து OTT தளங்களுக்கும் தண்ணி காட்டியது தமிழ்ராக்கர்ஸ். 
 
முன்பாவது தியேட்டர் பிரிண்டுகளை வெளியிட்டு கொண்டிருந்தனர். ஆனால், தற்போது 4K தரத்தில் வெளியிட ஆரம்பித்து விட்டனர். இதனால், அமேசான் நிறுவனத்துக்கு கோடிக்கணக்கில் நட்டம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இதற்கு தனியாக தொழில் நுட்ப குழு அமைத்து இரவு பகலாக மூன்று மாத தீவிர முயற்சிக்கு பின்னர் இப்படியான தளங்களை வேரோடு முடக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளார் அமேசான். 
 
 
Digital Millennium Copyright Act (DMCA) எனப்படும் காப்புரிமையை காக்கும் சட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான டிஜிட்டல் புகார்களை அள்ளி கொட்டியுள்ளது அமேசான். இது தமிழ்ராக்கர்சின் அனைத்து TLD-களையும் Internet Corporation for Assigned Names and Numbers (ICANN)-ல் இருந்து வேரோடு பிடுங்கி எடுத்துள்ளது அமேசான். 
 

இது குறித்து முழு தகவல்கள் இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழ்ராக்கர்ஸ் முடக்கபட்டது அதனுடைய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்ராக்கர்ஸ் நிரந்தரமாக மூடப்பட்டது. ஆனால், வேறொரு பெயரில் மீண்டும் அவர்கள்இந்த வேலையை தொடர்வார்களா..? அல்லது, ஆட்டம் முடிந்து விட்டதா என்று வரும் காலங்களில் தெரிய வரும். 
 
 
இந்த தகவல், தமிழ் சினிமா தயாரிப்பளர்களை நிம்மதிபெருமூச்சு விட வைத்துள்ளது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, தமிழ்ராக்கர்ஸ் இல்லனா என்ன Telegram இருக்கு.. வாட்சப்ல ட்ரெயின் விடுவோம் என்று தமிழ்ராக்கர்ஸ் வெறியர்கள் மீம்களை பறக்க விட்டு மனசை தேற்றி வருகிறார்கள். 

"தமிழ் ராக்கர்ஸ்"-ஐ அக்கு வேர் ஆணி வேறாக பிச்சு போட்ட "அமேசான்" - பின்னணியில் நடந்த பரபரப்பு சம்பவம்..! "தமிழ் ராக்கர்ஸ்"-ஐ அக்கு வேர் ஆணி வேறாக பிச்சு போட்ட "அமேசான்" - பின்னணியில் நடந்த பரபரப்பு சம்பவம்..! Reviewed by Tamizhakam on October 19, 2020 Rating: 5
Powered by Blogger.