"அந்த ஹீரோவின் பொண்டாட்டிக்கு என்னை பிடிக்கவில்லை... அதனால்..." - வெளிப்படையாக கூறிய டாப்ஸி..!


தமிழில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி தேசிய விருதை பெற்ற திரைப்படம் ஆடுகளம், இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை டாப்ஸி. 
 
இந்த படம் வெற்றியடைந்ததன் மூலம் நடிகை டாப்ஸி தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பிரபலமடைந்தார். இதனைத் தொடர்ந்து அஜித் நடித்த ஆரம்பம், லாரன்ஸ் நடித்த காஞ்சனா போன்ற திரைப்படங்களில் நடித்தார். 
 
இதனைத் தொடர்ந்து, தமிழ் படங்கள் மட்டும் இன்றி தெலுங்கு படங்களிலும் நடித்ததால் தெலுங்கு திரையுலகில் இவருக்கு, மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும் பாலிவுட்டில் இவர் நடித்த 'பிங்க்', 'சபானா' போன்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று, இவரை சினிமாவின் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி சென்றது. 
 
தற்போது ஹிந்தி மொழியில் மட்டும் நடித்து வரும் டாப்சி, சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், தனது ஆரம்பகால சினிமா பயணத்தில் தான் சந்தித்த இன்னல்கள் குறித்து பேசியிருக்கிறார். பொதுவாகவே, நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த அவமானங்களை அவ்வளவு எளிதாக வெளியில் கூறிவிட மாட்டார்கள்.
 
சில நடிகைகள் மட்டுமே வெளிப்படையாக கூறுவார்கள். அந்த வகையில் டாப்ஸியும் ஒருவர். அவர் கூறுகையில், ஒரு ஹீரோவின் மனைவிக்கு என்னை பிடிக்கவில்லை, அதனால் அப்படத்திலிருந்து நீக்கப்பட்டேன். 
 
நான் பேசிய வசனம் ஒன்று ஒரு படத்தில் அதன் ஹீரோவுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக மாற்றினர். மற்றொரு படத்தில் நாயகனின் காட்சியை விட எனது அறிமுக காட்சி சிறப்பாக இருந்ததால் அதை மாற்ற வைத்தனர். 
 
ஒரு படம் சரியாக ஓடவில்லை என்று கூறி எனது சம்பளத்தை குறைத்தனர். இப்படி ஆரம்பகால சினிமாவில் பல விதமான இன்னல்களை சந்தித்துள்ளேன். அதனால் எனக்கு மகிழ்ச்சி தரக்கூடிய படங்களில் மட்டுமே நடிக்க தொடங்கினேன். 
 
பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடிக்க தொடங்கிய பின் ஒரு நடிகர், என்னை அவரது படத்தில் நடிக்க தயங்கினார் என்றார்.

"அந்த ஹீரோவின் பொண்டாட்டிக்கு என்னை பிடிக்கவில்லை... அதனால்..." - வெளிப்படையாக கூறிய டாப்ஸி..! "அந்த ஹீரோவின் பொண்டாட்டிக்கு என்னை பிடிக்கவில்லை... அதனால்..." - வெளிப்படையாக கூறிய டாப்ஸி..! Reviewed by Tamizhakam on November 17, 2020 Rating: 5
Powered by Blogger.