ஒரு கையில் சரக்கு....இன்னொரு கையில் கன்றாவி.. கண்றாவி.. - பிக்பாஸ் சம்யுக்தாவை விளாசும் ரசிகர்கள்..!


தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் சம்யுக்தா. மாடலிங் மற்றும் விளம்பரப் படங்களில் நடித்தவர் என்று தான் பலரும் நினைத்திருப்பார்கள். 
 
ஆனால் சன் டிவியில் ஒளிபரப்பான சந்திரகுமாரி என்ற சீரியலில் ராதிகா சரத்குமார் உடன் இணைந்து சம்யுக்தா நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது அவர் நடித்த சந்திரகுமாரி சீரியலின் எபிசோட்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளன. 
 
ராடான் மீடியா நிறுவனம் பெரும் பொருட் செலவில் தயாரித்த ‘சந்திரகுமாரி’ சீரியல் சரித்திர கால பெண்ணாகவும், தற்காலத்து பெண்ணாகவும் 2 கேரக்டர்களில் நடித்திருந்தார் ராதிகா. 
 
சரித்திர காலத்து கதையை ‘பாட்ஷா’ பட இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவும், நிகழ்காலக் கதையை சி.ஜே.பாஸ்கரும் இயக்கினார்கள். 2018-ம் ஆண்டு டிசம்பரிலிருந்து ஒளிபரப்பான ‘சந்திரகுமாரி’ சீரியல் 2019-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் முடிவடைந்தது. மிகக் குறுகிய காலமே இந்த சீரியல் ஒளிபரப்பானது.
 
 
பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் மற்ற போட்டியாளர்களுடன் ஒட்டாமல் இருந்த சம்யுக்தா கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.அதைத்தொடர்ந்து ஆரியுடன் ஏற்பட்ட மோதல் உள்ளிட்டவற்றால் கடந்த வாரம் பிக்பாஸ் ரசிகர்களிடையே பேசுபொருளாக இருந்தார் சம்யுக்தா.
 
இந்நிலையில், கையில் சரக்குடன் இரவு நேர பார்டியில் கலந்து கொண்ட அவரது புகைப்படங்கள் சில சில இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு கையில் குழந்தை, மறு கையில் சரக்கு.. என்ன கன்றாவி இது என விளாசி வருகிறார்கள்.
 
மேலும், சக பிக்பாஸ் போட்டியாளர் ரியோ மற்றும் சம்யுக்தாவின் இந்த புகைப்படம் இரண்டையும் ஒப்பிட்டு இது வளர்ப்பு... இதுவும் வளர்ப்பு என்று மீம்களை பறக்கவிட்டு வருகிறார்கள்.

ஒரு கையில் சரக்கு....இன்னொரு கையில் கன்றாவி.. கண்றாவி.. - பிக்பாஸ் சம்யுக்தாவை விளாசும் ரசிகர்கள்..! ஒரு கையில் சரக்கு....இன்னொரு கையில் கன்றாவி.. கண்றாவி.. - பிக்பாஸ் சம்யுக்தாவை விளாசும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on November 26, 2020 Rating: 5
Powered by Blogger.