" காட்டுக்குள்ள காட்டு குத்து.." - யாஷிகா ஆனந்த் உச்ச கட்ட கவர்ச்சி - சூடேறி கிடக்கும் நெட்டிசன்கள்..!


தமிழ் சினிமாவின் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் திரையுலகில் பிரபலம் ஆனவர் யாஷிகா ஆனந்த். இந்தப் படத்தைத் தொடர்ந்து இவர் உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் பங்கேற்றார். 
 
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போதே செம கவர்ச்சியான உடைகளில் வலம் வந்த யாஷிகா ஆனந்த் நிகழ்ச்சி விட்டு வெளியேறிய பின்னரும் அதே உத்தியை கையாண்டு வருகிறார். சமூக வலைதளங்களில் தினமும் ஒரு கவர்ச்சி புகைப்படம் என்பது போல விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
 
முந்தானை முடிச்சு படத்தின் ரீமேக்கில் கவர்ச்சி புயலாக வலம் வரும் யாஷிகா ஆனந்த் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. பாக்யராஜின் திரை வாழ்வில் மிக முக்கியமான படங்களில் ஒன்று முந்தானை முடிச்சு, ஏ வி எம் தயாரித்த இந்த படத்தில் பாக்யராஜ் மற்றும் ஊர்வசி ஆகியோர் நடித்திருந்தனர். 
 
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கினார் பாக்யராஜ். இந்த திரைப்படம் 1985 ஆம் ஆண்டு வெளியாகி வெள்ளி விழா கொண்டாடியது. இந்நிலையில் இந்த படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் விரும்பினார் என்று பாக்யராஜ் சமீபத்தில் தெரிவித்திருந்தார். 
 
இந்நிலையில் 37 ஆண்டுகளுக்குப் பின் அந்த படத்தை இப்போது ரீமேக் செய்து சசிக்குமார் நடிக்க உள்ளார். முதல் பாகத்தை எழுதி இயக்கிய பாக்யராஜே இந்த பாகத்துக்கும் கதை, திரைக்கதை மற்றும் வசனம் ஆகிய பொறுப்புகளை ஏற்றுள்ளார். மேலும் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளார். 
 
இந்நிலையில் பாக்யராஜ் கதாபாத்திரத்தில் சசிக்குமார் நடிக்க ஊர்வசி கேரக்டரில் யார் நடிப்பது என்ற கேள்வி எழுந்தது. இப்போது அதுபற்றிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. 
 
கடந்த சில ஆண்டுகளாக தன் நடிப்புத் திறனாலும், படங்களின் தேர்வாலும் கவனம் ஈர்த்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ்தான் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. 
 
படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் ஒன்றான அந்த டீச்சர் கதாபாத்திரத்தில் தற்போது நடிக்க யாஷிகா ஆனந்திடம் பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது.
 
 
இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு சூடான கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்து இளசுகளின் கவனத்தை ஈர்த்து வருகிறார் யாஷிகா ஆனந்த்.


இதனை பார்த்து சூடான ரசிகர்கள் கண்டமேனிக்கு கருத்துக்களை தீட்டி வருகிறார்கள்.

" காட்டுக்குள்ள காட்டு குத்து.." - யாஷிகா ஆனந்த் உச்ச கட்ட கவர்ச்சி - சூடேறி கிடக்கும் நெட்டிசன்கள்..! " காட்டுக்குள்ள காட்டு குத்து.." - யாஷிகா ஆனந்த் உச்ச கட்ட கவர்ச்சி - சூடேறி கிடக்கும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on November 10, 2020 Rating: 5
Powered by Blogger.