16 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த காதல் ஜோடி - வைரலாகும் செல்ஃபி புகைப்படம்..!


ஷங்கர் இயக்கத்தில் வெளியான அனைத்துப் படங்களுக்குமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும் பாக்ஸ் ஆபிஸிலும் இடம் பிடித்துள்ளது. 
 
இதனால், இந்தியத் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் ஷங்கர். படங்களை தயாரிப்பதிலும் அவர் ஆர்வம் காட்டி வருகிறார். அந்தவகையில் அவர் முதல்முதலாக தயாரித்த படம் காதல்.

இந்த படத்தில் பள்ளிப்பருவ காதலை மிகவும் அழகாகவும் வசீகரமாகவும் சொல்லி அதன் வலியையும் அருமையாக கூற பாலாஜி சக்தி வேலால் மட்டுமே சாத்தியமானது.

டீன் ஏஜ் பருவத்தில் வரும் காதல் பெரும்பாலும் இனக்கவர்ச்சியால் தான் வரும் என்று சொல்வார்கள். ஆனால், இந்த படத்தின் கதாநாயகி சந்தியாவுக்கு, அழுக்கா இருக்குற பரத் பார்த்ததும் காதல் வருகிறது. இதை மிகவும் ஆழகாக சொல்லி கதையை நகர்த்தி இருப்பார்கள்.

கடந்த 2004-ம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக அப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. 
 
பாலாஜி சக்திவேல் இயக்கி இருந்த இப்படத்தில் பரத், சந்தியா இருவரும் காதல் ஜோடிகளாக நடித்திருந்தனர். இப்படத்தில் இவர்களது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.
 
பரத் இதற்கு முன்பு பல படங்களில் நடித்திருந்தாலும், இந்த படத்தில் இருவரின் நடிப்பும் மிகவும் பேசப்பட்டது. இதுவும் கிளைமாக்ஸில் பரத்தின் நடிப்பு, கதாபாத்திரத்துடன் ஒன்றி, காதல் தோல்வியின் வலியை நம் கண் முன் கொண்டுவந்து நிறுத்தி, அனைவரின் கண்களிலும் கண்ணீர் வரவைத்திருப்பார். 
 

 
இன்றளவும் அவர் ஒரு சிறந்த நடிகர் என்பதற்கு எடுத்துக்காட்டாக அந்த படம் அமைந்தது என்று சொல்லலாம். இதையடுத்து இவர்கள் இருவரும் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான கூடல்நகர் படத்தில் ஜோடியாக நடித்தனர். இந்நிலையில், பரத்தும் சந்தியாவும் 13 ஆண்டுகளுக்கு பின் சந்தித்துள்ளனர். 
 
அப்போது இருவரும் ஒன்றாக எடுத்த செல்பி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

16 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த காதல் ஜோடி - வைரலாகும் செல்ஃபி புகைப்படம்..! 16 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த காதல் ஜோடி - வைரலாகும் செல்ஃபி புகைப்படம்..! Reviewed by Tamizhakam on December 14, 2020 Rating: 5
Powered by Blogger.