"தளபதி 65" - கதை இது தான் - வைரலாகும் தகவல்..!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. கரோனா அச்சுறுத்தலால் வெளியீடு தள்ளி வைக்கப்பட்ட இந்தப் படம், அடுத்த ஆண்டு பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது.
‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு, சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்குத் தேதிகள் அளித்துள்ளார் விஜய்.'தளபதி 65' படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
தற்போது இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. புத்தாண்டு கொண்டாட்டமாக 'தளபதி 65' படத்தின் தலைப்பு அறிவிக்கப் படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், 'தளபதி 65' படத்தின் படப்பிடிப்பை மார்ச் மாதத்தில் தொடங்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. மூன்று கட்டமாகப் படப்பிடிப்பை நடத்தி முடித்து, தீபாவளிக்கு வெளியிட்டுவிட வேண்டும் எனவும் திட்டமிட்டுள்ளது.
இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார். விஜய்யுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு, படப்பிடிப்பு இடங்கள் தேர்வு, தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு ஆகியவை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த படத்தின் கதை குறித்த ஒரு தகவல் இணையத்தில் காட்டு தீயாக பரவி வருகின்றது. அதன் படி, இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக இருந்து ட்ராப் ஆகி போன "வேட்டை மன்னன்" திரைப்படத்தின் கதை தான் "தளபதி 65" என கூறுகிறார்கள்.
மேலும்,தளபதி விஜய்க்காக மற்றும் நிகழ்கால சம்பவங்களை வைத்து சில மாற்றங்களை செய்து திரைக்கதை அமைத்து வருகிறார் நெல்சன் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
"தளபதி 65" - கதை இது தான் - வைரலாகும் தகவல்..!
Reviewed by Tamizhakam
on
December 17, 2020
Rating:
