"இதுல என்ன இருக்குன்னு 2 லட்சம் லைக்ஸ்சு.." - அனுஷ்கா வெளியிட்ட புகைப்படம் - கலாய்க்கும் ரசிகர்கள்..!

 
நிசப்தம் படத்தில் மாற்றுத்திறனாளியாக நடித்தார் அனுஷ்கா. அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அடுத்து சகுந்தலம் என்ற படத்தின் கதையை கேட்டவர் அதில் நடிக்க மறுத்து விடவே, சமந்தா கமிட்டானார். 
 
தற்போது தெலுங்கில் ரா ரா கிருஷ்ணய்யா என்ற படத்தை இயக்கிய பி.மகேஷ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் அனுஷ்கா. முன்பு சைஸ் ஜீரோ படத்திற்காக தனது உடல் பருமனை அதிகப்படுத்திய அனுஷ்கா 
 
இந்த படத்திற்காக தனது உடல்மொழியை மாற்றி நடிக்கிறாராம். வித்தியாசமான கதையில் உருவாகும் இந்த படத்தில் இதற்கு முன்பு பார்த்திராத முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் அனுஷ்காவை பார்க்கலாம் என்று டைரக்டர் மகேஷ் ஒரு தகவல் வெளியிட்டிருக்கிறார். 
 
விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள இப்படத்தை யு.வி.கிரியேசன்ஸ் தயாரிக்கிறது.இந்நிலையில், முகம் முழுதும் கூந்தலை படற விட்டபடி க்ளோஸ்அப்பில் ஒரு செல்ஃபியை க்ளிக் செய்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்லோடியுள்ளார் அனுஷ்கா.
 
இதனை பார்த்த ரசிகர்கள் வெறும் ஐந்து மணி நேரத்தில் 2 லட்சம் லைக்குகளை லாரியில் கொண்டு வந்து கொட்டிவிட்டனர்.
 
 
இந்த லைக்குகளை கவனித்த சில நெட்டிசன்கள் இந்த போட்டோவுல என்ன இருக்குன்னு 2 லட்சம் லைக்ஸ் வந்துருக்கு என்று கலாய்த்து வருகிறார்கள்.

"இதுல என்ன இருக்குன்னு 2 லட்சம் லைக்ஸ்சு.." - அனுஷ்கா வெளியிட்ட புகைப்படம் - கலாய்க்கும் ரசிகர்கள்..! "இதுல என்ன இருக்குன்னு 2 லட்சம் லைக்ஸ்சு.." - அனுஷ்கா வெளியிட்ட புகைப்படம் - கலாய்க்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on January 22, 2021 Rating: 5
Powered by Blogger.