"தளபதி 65" படத்தில் வில்லனாகும் முன்னணி ஹீரோ..! - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!


நடிகர் விஜய் நடிப்பில் வெளியான "மாஸ்டர்" படத்தில் நடிகர் விஜய்சேதுபதி வில்லனாக நடித்தார். அந்த வகையில் விஜய்க்கு மட்டுமின்றி விஜய்சேதுபதியின் நடிப்புக்கும் தியேட்டர்களில் பலத்த கைதட்டல் கிடைத்து வருகிறது. 
 
விஜய்சேதுபதியும் பிரபலமான ஹீரோ என்பதால் அவருக்கும் விஜய்க்கு இணையான காட்சிகளை கொடுத்து படமாக்கியிருந்தார் லோகேஷ் கனகராஜ். 
 
இந்த நிலையில், அடுத்தபடியாக கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படத்தை இயக்கிய இயக்குனர் "நெல்சன்" இயக்கும் படத்தில் நடிக்கப்போகிறார் விஜய். அடுத்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. 
 
இப்படத்தில் விஜய்யுடன் மோதப்போகும் வில்லன் குறித்த ஒரு தகவல் தற்போது கசிந்துள்ளது. நடிகர் அஜீத்தின் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் அருண்விஜய் தற்போது தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி ஹீரோவாக வலம் வந்துகொண்டிருக்கிறார். 
 

 
இந்நிலையில், இவர் விஜய்-65ஆவது படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக தெரிய வந்துள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும். 
 
அதோடு, மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து இந்த படத்திற்கும் இசையமைப்பாளர் அனிருத்தே இசையமைக்கிறார் என்பதும் உறுதியாகியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--