அட கொடுமைய...! - திருமணத்திற்கு பிறகு காஜல் அகர்வால் ஜோடி போடவுள்ள முதல் ஹீரோ..! - உச் கொட்டும் கோடம்பாக்கம்..!
காஜல் அகர்வால், பாரதிராஜா அறிமுகப்படுத்திய ப்ராடக்ட். அவர் அறிமுகப்படுத்திய நடிகைகள் யாருமே தோற்றுப் போனதாக சரித்திரம் கிடையாது.
காஜல் அகர்வாலை பொம்மலாட்டம் என்னும் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா. பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, பாயும் புலி, ஜில்லா உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால்.
தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துவருகிறார். அடுத்து அவர் நடித்துள்ள, பாரிஸ் பாரிஸ் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார்.
தற்போது துல்கர் சல்மான் அவர்களுடன் டான்ஸ் மாஸ்டர் இயக்கும் ஹே சினாமிகா என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். அதன்பிறகு தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஆன சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா என்னும் படத்தில் நடித்து வருகிறார்.
இவையெல்லாம் திருமணத்திற்கு முன்பு ஒப்பந்தமான படங்கள். இந்நிலையில், திருமணத்திற்கு பிறகு புதிய படத்தில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க உள்ளார். இதுதவிர மேலும் இரண்டு ஹீரோயின்களும் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
பிரபுதேவாவிற்கு ஹீரோயினாக நடித்தால் அந்த நடிகையின் மார்கெட் அவுட் ஆகிவிடும் என செண்டிமெண்ட் பேச்சு ஒன்று கோடம்பாக்கத்தில் காலம் காலமாக இருந்து வருகின்றது.
இந்நிலையில், திருமணம் ஆன கையோடு பிரபுதேவாவிற்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள காஜல் அகர்வாலின் சினிமா எதிர்காலம் எப்படி இருக்க போகின்றதோ என்று உச் கொட்டுகின்றது கோடம்பாக்கம்.
சமந்தா போல் திருமணத்திற்கு ஜொலிப்பாரா அம்மணி என்பதை பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும்.
அட கொடுமைய...! - திருமணத்திற்கு பிறகு காஜல் அகர்வால் ஜோடி போடவுள்ள முதல் ஹீரோ..! - உச் கொட்டும் கோடம்பாக்கம்..!
Reviewed by Tamizhakam
on
January 18, 2021
Rating:
