விஜய் மக்கள் இயக்கம் இது போல மாறி விட்டது - எஸ்.ஏ.சி பரபரப்பு குற்றச்சாட்டு..! - விஜய்க்கு வேட்டு வைக்கிறாரே..!

 
தமிழ் சினிமாவில் இருந்து அடுத்து அரசிலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுபவர் ரஜினிகாந்திற்கு பிறகு நடிகர் விஜய் தான்.
 
இந்நிலையில், தமிழக மக்கள் புதுவரவு அரசியல்வாதியை தேடி வருகிறார்கள். அதனால் இன்னும் 10 ஆண்டுகளுக்குள் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது தந்தையான டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு சேனல் பேட்டியில் தெரிவித்திருக்கிறார். 
 
மேலும் அவர் கூறுகையில், கடந்த அக்டோபர் மாதம் நான் கட்சி ஆரம்பித்ததே விஜய்க்காகத் தான். அவரது அரசில் வாழ்க்கைக்கு ஒரு நல்ல அஸ்திவாரத்தை ஏற்படுத்த நினைத்தேன். 
 
ஆனால் அவரை சிலர் குழப்பி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் அவருக்கு நல்லது தான் செய்து வருகிறேன் என்பது விஜய்க்கு ஒருநாள் புரியும். என்னை ப்போன்ற தந்தை கிடைப்பது ரொம்ப பெரிய விசயம். 
 
அதோடு, இந்த வயதில் தேர்தலில் போட்டியிட்டு பதவியை பிடிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் எனக்கு கிடையாது. நான் விஜய்யின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செய்யும் விசயங்கள் இங்கே தவறாக புரிந்து கொள்ளப்பட்டு வருகிறது. 
 
விஜய் மக்கள் இயக்கமானது வியாபாரம் போல் மாறி விட்டது. மாஸ்டர் படத்தின் 100 ரூபாய் டிக்கெட்டுகளை அவர்கள் வாங்கி 1000 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள் என்றும் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
 
இவரை விஜய்யின் தந்தை என்று கொண்டாடினால் இவர் விஜய்க்கே வேட்டு வைக்கிறாரே என்று அலுத்துக்கொள்கிறார்கள் மன்றத்தினர்.

விஜய் மக்கள் இயக்கம் இது போல மாறி விட்டது - எஸ்.ஏ.சி பரபரப்பு குற்றச்சாட்டு..! - விஜய்க்கு வேட்டு வைக்கிறாரே..! விஜய் மக்கள் இயக்கம் இது போல மாறி விட்டது - எஸ்.ஏ.சி பரபரப்பு குற்றச்சாட்டு..! - விஜய்க்கு வேட்டு வைக்கிறாரே..! Reviewed by Tamizhakam on January 27, 2021 Rating: 5
Powered by Blogger.