சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசனில் கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பாடகி நித்யஸ்ரீ. ஜூனியர் குட்டீஸ் எல்லாம் இப்போது வளர்ந்து விட்டார்கள்.
அதிலும் குறிப்பாக நித்யஸ்ரீ-க்கு சமூகவலைத்தளங்களில் ஏகப்பட்ட ஃபேன்ஸ். அவரை இன்ஸ்டாவில் பின் தொடர்பவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறார்கள்.
இறுதி சுற்று வரை மேடை ஏறிய நித்ய ஸ்ரீயின் குரல் தற்போது சிங்கப்பூர், மலேசியா வரை கேட்கிறது. பாடகியாக மட்டுமின்றி மாடலிங் துறையிலும் கவனம் செலுத்தி வரும் நித்யஸ்ரீ இசை ஆல்பங்களிலும் நடித்து வருகிறார்.
அப்படி சமீபத்தில் நித்ய ஸ்ரீ ஆல்பம் ஒன்றின் ஷூட்டிங்கில் பங்கேற்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது. ஸ்டேண்ட் காட்சியில் நடிக்க முயன்ற போது நிலைதடுமாறி விழுந்த நித்யஸ்ரீக்கு லேசான அடிபட்டது.
இதுகுறித்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நித்யஸ்ரீ, தன்னை நலம் விசாரித்தவர்களுக்கு நன்றியும், மெல்ல நலம் பெற்று வரும் தான் விரைவில் பூரண நலமடைவேன் என்றும் கூறியுள்ளார்.



