முதன் முறையாக நீச்சல் உடையில் மஞ்சிமா மோகன் - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 
மஞ்சிமா மோகன் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மிகவும் பிரபலமாக இருந்தவர். அதற்குப் பிறகு 2015ல் ஒரு வடக்கன் செல்பி படம் மூலமாக மீண்டும் சினிமாவில் நடிகை ஆனார். 
 
அதற்கு பிறகு தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்திருந்தார். சிம்பு ஜோடியாக அந்தப் படத்தில் நடித்திருந்தார். பல பிரச்சனைகள் காரணமாக இந்த படம் சற்று தாமதமாக ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது. 
 
மஞ்சிமா மோகனுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. ஆனால் அதற்கு பிறகு தமிழில் மிகக் குறைந்த அளவில் வாய்ப்புகள் கிடைத்தது. கடைசியாக அவர் சென்ற வருடம் வெளிவந்த தேவராட்டம் படத்தில் தான் நடித்திருந்தார்.அதற்கு பிறகு தற்போது தன் கைவசம் மூன்று தமிழ் படங்களை வைத்திருக்கிறார் மஞ்சிமா மோகன். 
 

வெப் சீரிஸ் மோகம்

 
 
கொரோனா லாக் டவுன் காரணமாக தற்போது ஷுட்டிங் நடக்கவில்லை என்பதால் தன் வீட்டில் தான் நேரத்தை செலவிட்டு வருகிறார் மஞ்சிமா. சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தான் மீண்டும் ஷூட்டிங் செல்ல மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்திருந்தார். 
 
முன்னணி நடிகைகள் பலரும் வெப் சீரிஸ்களில் நடித்து வருவதை தொடர்ந்து மற்ற நடிகைகளுக்கும் வெப் சீரிஸ்களுக்கு ஒகே செல்கிறார்கள். பத்தே எபிசோடில் சினிமாவில் நடிக்கும் அளவுக்கு சம்பளம் கிடைத்து விடுகின்றது என்பதாலும் சென்சார் பிரச்சனை இல்லை என்பதனாலும் நடிகைகள் பலரும் வெப் சீரிஸ்களில் காட்டு காட்டு என காட்டுகிறார்கள்.
 

முதன்முறையாக நீச்சல் உடையில் 


சமீபத்தில், நித்யா மேனன், அஞ்சலி போன்ற நடிகைகள் உச்ச கட்ட கவர்ச்சி காட்சிகளில் நடித்து இணையத்தை அதிர வைத்தனர். இந்நிலையில், மஞ்சிமா மோகனும் தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருகிறாராம். இந்த வெப் சீரிஸில் முதன் முறையாக நீச்சல் உடையில் நடிக்கவுள்ளார் அம்மணி என்று கூறுகிறார்கள். 
 
இதற்காக, கணிசமாக உடல் எடையையும் குறைத்து ஒல்லியாக உடற்பயிற்சிகளை செய்து வருகிறாராம். இந்த வெப் சீரிஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகின்றது. மஞ்சிமா மோகன் பிகினி உடையில் நடிக்கும் தகவல் பரவியதை தொடர்ந்து அவரது ரசிகர்கள் வாயை பிளந்துள்ளார்.

முதன் முறையாக நீச்சல் உடையில் மஞ்சிமா மோகன் - வாயை பிளந்த ரசிகர்கள்..! முதன் முறையாக நீச்சல் உடையில் மஞ்சிமா மோகன் - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on January 03, 2021 Rating: 5
Powered by Blogger.