என்னம்மா ஃபுல் போதையா..? - கையில் மதுக்கோப்பை - மல்லாக்க படுத்துக்கொண்டு போஸ் - வனிதா அட்ராசிட்டி..!


சந்திரலேகா, நான் ராஜாவாக போகிறேன், மாணிக்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் வனிதா விஜயகுமார். அப்பா விஜயகுமார் உள்ளிட்ட குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சனையால் மிகவும் எதிர்மறையாக விமர்சிக்கப்பட்டார். 
 
யாரும் எதிர்பாராத திருப்பமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆரம்பத்தில் வனிதா மீது விமர்சனங்கள் எழுந்த போதும், யாரையும் எதிர்த்து முகத்திற்கு நேராக பேசும் அவருடைய குணம் ரசிகர்களுக்குப் பிடித்துப் போனது. 
 
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த வனிதா விஜயகுமார் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் வின்னராக மாறினார். அதன் பின்னர் தன்னுடைய சமையல் திறமையை வெளிப்படுத்தும் விதமாக யூ-டியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். 
 
 
வனிதாவின் யூ-டியூப் சேனலுக்கு உதவுவதற்காக வந்த பீட்டர் பாலை காதலித்து 3வது முறையாக திருமணம் செய்து கொண்டார். கடும் எதிர்ப்புகள், விமர்சனங்களுக்கிடையே நடந்த அந்த திருமணம் சில மாதங்கள் கூட நீடிக்கவில்லை. 
 
 
பீட்டர் பால் மதுபோதையில் தகராறு செய்ததால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்தனர். நீண்ட நாட்களாக பிரச்சனைகளுடன் போராடி வந்த வனிதா வீட்டில் ஒரு விசேஷம் நடந்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். 
 
சமீபத்தில், வனிதா விஜயகுமாரின் இளைய மகள் ஜெனிதா பூப்படைந்துள்ளார். அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் வனிதா, தனது மகள் பெரிய பெண்ணாகிவிட்டதாகவும், மகள்கள் இந்த உலகத்தில் விலை மதிப்பற்றவர்கள் என்றும் கூறி நெகிழ்ச்சியடைந்துள்ளார்.


இந்நிலையில், மாலத்தீவுகளுக்கு சுற்றுலா சென்றுள்ள அவர் அங்கிருந்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், என்னம்மா ஐந்தாவது ஃபுல் போதையா.? என்று கலாய்த்து வருகிறார்கள்.

என்னம்மா ஃபுல் போதையா..? - கையில் மதுக்கோப்பை - மல்லாக்க படுத்துக்கொண்டு போஸ் - வனிதா அட்ராசிட்டி..! என்னம்மா ஃபுல் போதையா..? - கையில் மதுக்கோப்பை - மல்லாக்க படுத்துக்கொண்டு போஸ் - வனிதா அட்ராசிட்டி..! Reviewed by Tamizhakam on January 24, 2021 Rating: 5
Powered by Blogger.