நடிகை நித்யா மேனன் குண்டே ஜாரி கல்லந்தய்யிந்தி , மல்லி மல்லி இடி ராணி ரோஜு ஆகிய இரு தெலுங்கு படம் நடித்து பிலிம்பேர் விருதுகளையும் வென்றார். தமிழில் “180” என்ற திரைப்படத்தில் சித்தார்த் ஜோடியாக அறிமுகமானவர் நடிகை நித்யா மேனன்.
முதல் படத்தை அடுத்து வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை, மெர்சல் போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் பிரபாலமான நடிகைகளில் ஒருவராக மாறினார்.
சினிமாவில் வாய்ப்புகள் வந்ததும் அதே நேரத்தில் அம்மணியின் உடல் எடையும் பெருத்து குண்டாக மாறினார். இதனால், பட வாய்ப்புகள் குறைந்து விட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு சைக்கோ படத்தில் நடித்திருந்தார் நித்யா மேனன்.
மேலும், பட வாய்ப்புகள் இல்லாததால் வெப் சீரிஸ்களில் எசக்கு பிசக்கான காட்சிகளிலும் நடித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார் அம்மணி.அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடித்து வருபவர் நடிகை நித்யாமேனன்.
விஜய்யின் மெர்சல் உள்பட பல படங்களில் நடித்தவரான இவர், தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் தி அயர்ன் லேடி படத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தில் நடிப்பதற்காக உடல் எடையை குறைத்துள்ளார். அதோடு, தான் நடித்த படங்களில் கவர்ச்சிகரமாக நடிக்காத அவர், தற்போது ஒரு பிரபல பத்திரிக்கையின் அட்டைப்படத்துக்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் நித்யா மேனன்னா இது என வாயை பிளந்து வருகின்றனர். மேலும், சக நடிகை அனுபமா பரமேஸ்வரன் Damn Hot என்று கருத்து தெரிவித்துள்ளார்.


