மாஸ்டர் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது தளபதி 65 படத்தை நடிக்கவுள்ளார். இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களுக்குள் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க இளம் நடிகை ரஷ்மிகா மந்தானாவிடம் பேச்சு வார்த்தை சென்றுகொண்டிருக்கிறது.
இந்நிலையில் தளபதி 65 படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க கருப்பன் பட கதாநாயகி தான்யா ரவிச்சந்திரனிடம் நடிக்க முடியுமா என படக்குழு கேட்டுள்ளார்.அதற்கு நடிகை தான்யா ரவிச்சந்திரனிடம் தளபதி 65 படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறி வாய்ப்பை மறுத்துவிட்டதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.
பலே வெள்ளையத்தேவா, பிருந்தாவனம், கருப்பன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தன்யா ரவிச்சந்திரன். அதன்பின் உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
நன்றாக நடிக்கத் தெரிந்த அவருக்கு அவர் எதிர்பார்த்தது போல் வாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையில், நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்ததாம். ஆனால் ஆளை விடுங்கள் என தன்யா மறுத்துவிட்டாராம்.
பெரிய நடிகர் படங்களில் கதாநாயகியாக நடித்தால் மட்டுமே ரசிகர்களிடம் ரீச் ஆகும். இல்லையெனில் சின்ன வேடங்களில் போட்டு டம்மி செய்து விடுவார்கள் என்பதை நன்றாகவே புரிந்து வைத்திருப்பதால்தான் அம்மணி தளபதி 65 படத்தில் நடிக்க மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags
Thalapathy 65