துல்கர் சல்மான் நடித்த நேரடி தமிழ்ப் படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இந்த படத்தை பிரான்சிஸ் தயாரித்தார். தேசிங் பெரியசாமி இயக்கிய இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த ரித்து வர்மா தன்னுடைய பளீர் சிரிப்பால் பல இளைஞர்களின் நெஞ்சை கொள்ளையடித்தார். மேலும், படத்திலும் கொள்ளைக்காரி வேடம் என்பதால் படம் பெரிய வரவேற்பை பெற்றது.
இவர் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அனுகோகுண்டா என்ற குறும்படம் மற்றும் பெல்லி சூபுலு திரைப்படத்தின் நடிப்பால் இவர் மிகவும் பிரபலமானவர்.
பெல்லி சூபுலுவில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான நந்தி விருதையும், சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விமர்சகர்கள் விருதையும் பெற்றார்.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனுடன் ஏற்பட்ட நட்பின் தொடர்ச்சியாக அவர் இயக்கத்தில் சியான் நடித்த துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார். ஆனால், யாரு கண்ணு பட்டதோ தெரியவில்லை அந்த படம் கிடப்பில் போடப்பட்டு விட்டது.
நல்லா வர வேண்டிய நடிகை. ஆனால், போதுமான வாய்ப்பு கிடைக்காதது ஏமாற்றம் தான். மற்ற நடிகைகளை போல இவரும் சமூக வலைதளங்களில் படு சுட்டி, ஆக்டிவாக இருக்க கூடியவர்.
இந்நிலையில், கடற்கரையில் கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.





