"இதனால் தான் ஆண்கள் என்றாலே வெறுக்கிறேன்.." - முதன் முறையாக போட்டு உடைத்த நித்யா மேனன்..!


அமேசான் பிரைம் விடியோவில் வெளியான "பீரித்: இன் டு த ஷேடோ' என்ற திரைப்படம், தென்னிந்திய சினிமாவைப் பற்றியும், இங்குள்ள நடிகர்களின் நடிப்புத் திறமை பற்றியும் உலக அளவில் தெரிந்து கொள்ள பெரிதும் உதவியது குறித்து இதில் நடித்துள்ள நித்யாமேனன் மகிழ்ச்சியில் உள்ளார். 
 
தொடர்ந்து முதன்முறையாக தெலுங்கில் "குமாரி ஸ்ரீமதி' என்ற வெப் சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இந்த நிலையில் இவர் அடுத்து நடிக்கும் திரைப்படம் தீனி.
 
நடிகர் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கும் இந்த "தீனி" படத்தில் நித்யாமேனன் ஹீரோயினாக நடிக்கிறார். நடிகர்களுக்கு எந்த அளவுக்கு ரசிகர் கூட்டம் இருந்து வருகிறதோ அதே போல சில முன்னணி கதாநாயகிகளுக்கும் இருக்கிறது. 
 
இதில் நித்யா மேனனுக்கு கொஞ்சம் கூடுதலாகவே பல மொழிகளில் இருக்கின்றது. கன்னடம், மலையாளம், தெலுங்கு, தமிழ் என பல மொழிகளில் நடித்து வரும் இவருக்கு இப்பொழுது பாலிவுட் திரைத்துறையும் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்க 2019ஆம் ஆண்டு வெளியான மிஷன் மங்கள்யான் மூலம் இந்திப்பட துறையிலும் கால் தடத்தை பதித்துள்ளார்.
 
சமீபத்தில், ஒரு பேட்டியில் பேசிய அவர், என் மீது வரும் புகார்களையும் விமர்சனங்களையும் கண்டுகொள்ள மாட்டேன். எந்த விஷயம் ஆனாலும் ஒளிவு மறைவு இல்லாமல் நேராக எதிரில் பேசுவதும், தெளிவாக சொல்வதும்தான் எனது பழக்கம். எதற்கும் தயங்க மாட்டேன். 
 
எனது முதல் காதல் தோல்வியில் முடிந்தது. அதன்பிறகு கொஞ்ச நாட்கள் ஆண்களையே நான் வெறுத்தேன். இனிமேல் காதல் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. யாருக்காகவும் என்னை நான் மாற்றிக்கொள்வது சுத்தமாக பிடிக்காது. 
 
எனக்கு பிடித்த மாதிரி வாழத்தான் விரும்புவேன். நிஜ வாழ்க்கையில் சாதாரண பெண்ணாகத்தான் யோசிப்பேனே தவிர நான் ஒரு நடிகை என்றோ, மற்றவர்களை விட வித்தியாசமானவள் என்றோ, ஏதோ ஆகாயத்தில் இருந்து குதித்தவள் என்றோ எப்போதும் நினைக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் நித்யா மேனன்.

"இதனால் தான் ஆண்கள் என்றாலே வெறுக்கிறேன்.." - முதன் முறையாக போட்டு உடைத்த நித்யா மேனன்..! "இதனால் தான் ஆண்கள் என்றாலே வெறுக்கிறேன்.." - முதன் முறையாக போட்டு உடைத்த நித்யா மேனன்..! Reviewed by Tamizhakam on February 12, 2021 Rating: 5
Powered by Blogger.