"இங்க குடிக்க தண்ணியே இல்ல.. நீங்க, குளிக்குறதுக்கு பால்.." - வைரல் வீடியோ - கேத்ரின் தெரேசா-வை விளாசும் ரசிகர்கள்..!


நடிகை கேத்ரின் தெரசா ‘மெட்ராஸ்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். இந்தப் ஒரு படத்திலேயே அவர் பிரபலமானார். அதையடுத்து ‘கணிதன்’, ‘கதகளி’, ‘கடம்பன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். 
 
தற்போது ‘கதாநாயகன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் தற்போது பல தெலுங்கு படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.கேத்ரின் ஆரம்பத்தில் கவர்ச்சியில் ஒரு லிமிட்டை தாண்ட மாட்டேன் என்று கண்டிஷன் போட்டு நடித்தார். 
 
ஆனால், அவர் ‘கௌதம் நந்தா’ படத்திற்காக தன்னுடைய கண்டிஷன் எல்லாவற்றையும் உடைத்தெறிந்து பிகினி உடையணிந்து நடித்தார். இவரது இந்த கவர்ச்சி ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. 
 
மேலும், இந்தப் படத்தில் கோபிசந்த் நாயகனாக நடிக்க, நடிகை ஹன்சிகா இன்னொரு நாயகியாக நடித்திருந்தார். தெலுங்கு ரசிகர்களுக்கு பிடித்தமான கிளாமர் ரோல் என்பதால் ஹன்சிகா அந்த படத்தில் இருப்பதைப்பற்றி கவலைப்படாமல் கவர்ச்சியாக நடித்திருந்தார் கேத்ரின் தெரசா. 
 
இந்தப் படத்தில் கேத்ரின் தெரசா பிகினி உடையணிந்து நடித்த காட்சிகளை தணிக்கை குழு வெட்டி வீசியது. ஆனாலும், இணையத்தில் இந்த காட்சிகளை வெளியிட்டுபடத்திற்கு பக்காவாக விளம்பரம் தேடியது படக்குழு.

இந்நிலையில், இதே படத்தில் ஒரு பாடல் காட்சிக்காக கேத்ரீன் தெரேசா பாலில் குளிப்பது போன்ற காட்சிகளையும் படமாக்கினார்கள்.இந்நிலையில், இந்த பாடலில் இருந்து தணிக்கை செய்யப்பட்ட சில காட்சிகள் இணையத்தில் வெளியாகி கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
 
இங்க குடிக்க தண்ணியே இல்லை.. இவங்க குளிக்குறதுக்கு பால் கேக்குதா என்று பலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

"இங்க குடிக்க தண்ணியே இல்ல.. நீங்க, குளிக்குறதுக்கு பால்.." - வைரல் வீடியோ - கேத்ரின் தெரேசா-வை விளாசும் ரசிகர்கள்..! "இங்க குடிக்க தண்ணியே இல்ல.. நீங்க, குளிக்குறதுக்கு பால்.." - வைரல் வீடியோ - கேத்ரின் தெரேசா-வை விளாசும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 08, 2021 Rating: 5
Powered by Blogger.