நடிகை சம்யுக்தாவுக்கு ஆதரவு குரல் கொடுத்த ஸ்ரத்தா ஸ்ரீநாத்..!
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என இந்தியாவின் பல்வேறு மொழிகளில் நடித்து அசத்தி வருகிறார் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் செம போல்டான ரோலில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான பிங்க் படத்தில் டாப்ஸி நடித்து அனைத்து பாராட்டுக்களையும் அள்ளிய ரோலில் தமிழில் இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கோமாளி சம்யுக்தா ஹெக்டே அரைகுறை ஆடையில் பொதுவெளியில் இருந்ததால் அடி வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியது.
தமிழ் சினிமாவில் வாட்ச்மேன், பப்பி மற்றும் சமீபத்தில் வெளிவந்த கோமாளி ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளவர் சம்யுக்தா ஹெக்டே. பெங்களூரில் வசிக்கும் அவர் கொரோனா காலத்தில் தனது இன்ஸ்ட்ராகிராம்பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி படங்களை வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் தன் வீட்டுக்கு அருகில் இருக்கும் பூங்கா ஒன்றுக்கு நண்பர்களுடன் வளையங்களை வைத்து உடற்பயிற்சி சென்றார். அவர் அணிந்திருந்த உடை கவர்ச்சியாக இருப்பதாக கூறி அங்கிருந்த கவிதா ரெட்டி என்ற பெண் உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஒருக்கட்டத்தில் கைகலப்பு வரை சென்றது. பின்னர் போலீஸ் வந்து சமரசம் செய்தனர். இந்த சம்பவங்களை நேரலையில் வெளியிட்டார் சம்யுக்தா. இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விஷயத்தில் சம்யுக்தாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சம்யுக்தாவுக்கு ஆதரவான கருத்தை வெளியிட்டிருந்தார் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத்.
நான் ஒரு வழக்கறிஞராக இருந்தும், இந்த சம்பவத்தை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. இது எந்த மாதிரியான சமூகம் என்று தெரியவில்லை. இதற்காக சம்யுக்தாவை போலீஸ் நிலையம் வரை அழைத்துச் சென்றதையும், அவரை தரக்குறைவாக விமர்சிப்பதையும் சகிக்க முடியவில்லை.
இதையும் மீறி சம்யுக்தான தன் உரிமைக்காக போராடி இருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள் எனக் கூறி ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார் ஸ்ரத்தா ஸ்ரீநாத்.
நடிகை சம்யுக்தாவுக்கு ஆதரவு குரல் கொடுத்த ஸ்ரத்தா ஸ்ரீநாத்..!
Reviewed by Tamizhakam
on
February 20, 2021
Rating:
