"அத பத்தி யாரும் கவலைப்படல.. பயத்துடன் தான் வாழ்ந்தேன்.." - விவாகரத்து குறித்து அமலாபால் ஒப்பன் டாக்..!


"சிந்து சமவெளி" என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், நடிகை அமலா பால் அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் ரவுண்டு கட்டி வலம் வருகின்றார். 
 
அவர் மைனா படத்தில் நடித்து பெரும் புகழை பெற்ற பின்னர் தொடர்ந்து விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். மேலும், தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் படு பிசியாக தற்போது நடித்து வந்திருந்தார். 
 
கடைசியாக தமிழில் "ஆடை" திரைபடத்தில் நடித்து இருந்தார். காதல், திருமணம், குழந்தைகள் பற்றிய எல்லா கேள்விகளும் பெண்களை பற்றியே கேட்கப்படுகின்றன. ஆண்களை பார்த்து, இந்த கேள்விகளை யாரும் கேட்பது இல்லை. 
 
பெண் அடிமைத்தனத்திலும், அவமானத்திலும் இருக்கிறாள். பொருளாதாரத்திலும் மற்றவர்களை சார்ந்து இருக்கிறாள்.அவளை குழந்தை பெற்றுக் கொடுப்பவளாகவும் பார்க்கின்றனர். பல நூற்றாண்டுகளாகவே பெண் வலியுடன் வாழ்ந்து வருகிறாள். 
 
அவளுக்குள் வளரும் குழந்தை, அவளை சாப்பிட கூட அனுமதிப்பது இல்லை. எப்போதும் வாந்தி எடுப்பது போலவே உணர்கிறாள். வயிற்றில் குழந்தை ஒன்பது மாதம் வளர்ந்ததும் அதை பெற்று எடுப்பது என்பது மரணம் போன்றே இருக்கும்.
 

ஆண்களை பொறுத்தவரை பெண்களை பாலுணர்வை பூர்த்தி செய்யும் ஒரு பொருளாகவே பயன்படுத்துகின்றனர். பெண்ணை உண்மையாக நேசித்து இருந்தால் உலகில் மக்கள் தொகை அதிகரித்து இருக்காது. அவன் சொல்லும் காதல் என்ற வார்த்தை போலி. பெண்ணை ஒரு வளர்ப்பு பிராணியாகவே அவன் நடத்துகிறான்.
 
இந்நிலையில் ஏ.எல்.விஜய்யை விவகாரத்து செய்தது பற்றி பேட்டி ஒன்றில் கூறிய அமலா பால், நான் விவகாரத்து பெற்று பிரிய முடிவு செய்த போது என்னை யாரும் ஆதரிக்கவில்லை. அனைவரும் என்னை பயமுத்தவே முயற்சித்தனர்.வெற்றிகரமான நடிகையாக இருந்த போதிலும் அந்த சமயத்தில் பயத்துடனேயே வாழ்ந்தேன். 
 
எனது சந்தோஷம் மற்றும் மனநிலை பற்றி யாரும் கவலைப்படவில்லை என்றார். சமீபத்தில் ஜெகபதி பாபுவுடன் நடித்த வெப்சீரிஸ் ஒன்றில், மனைவியை மனரீதியாக துன்புறுத்தும் கணருக்குடன் வாழும் மனைவி வேடத்தில் அமலா பால் நடித்திருந்தார்.

"அத பத்தி யாரும் கவலைப்படல.. பயத்துடன் தான் வாழ்ந்தேன்.." - விவாகரத்து குறித்து அமலாபால் ஒப்பன் டாக்..! "அத பத்தி யாரும் கவலைப்படல.. பயத்துடன் தான் வாழ்ந்தேன்.." - விவாகரத்து குறித்து அமலாபால் ஒப்பன் டாக்..! Reviewed by Tamizhakam on February 27, 2021 Rating: 5
Powered by Blogger.