பிகில், தனுஷ் ராசி நேயர்களை படங்களில் நடித்த நடிகை ரெபா மோனிகா ஜான், நேற்று தனது பிறந்தநாளை துபாயில் கொண்டாடினார். அங்கு இன்ப அதிர்ச்சியாக அவர் நீண்ட நாட்களாக காதலித்து வந்த ஜோய் மோன் பங்கேற்று, அவரிடம் காதலை வெளிப்படுத்தினார்.
இதை ரெபா ஏற்றதோடு, இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடந்தது. ''லாக்டவுனால் 6 மாதங்களாக ரெபாவை சந்திக்கவில்லை, அவரை பார்த்ததும் காதல் சொல்ல தோன்றியது'' என ஜோய் மோன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே இருவரும் காதலித்து வந்தனர். இப்போது அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளனர். ரெபா மோனிகா ஜான் தற்போது விஷ்ணு விஷால் உடன் எப்.ஐ.ஆர் படத்தில் நடித்துள்ளார். இதுதவிர வெப்சீரிஸிலும் நடிக்கிறார்.
இந்நிலையில், தற்போது நிச்சயம் முடிந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார் ரெபா மோனிகாஜான்.
இதனை பார்த்த ரசிகர்கள்,என்னங்கடா.. நிச்சயம் ஆனதையே ஃபர்ஸ்ட் நைட் ரேஞ்சுக்கு செலிபிரேட் பண்றீங்க என்று புகைச்சலை கிளப்பி வருகிறார்கள். சிங்கிள்ஸ் பசங்க பாவம் சும்மா விடாது டாவ் என வழக்கம் போல 90'ஸ் கிட்ஸ் ஒரு பக்கம் புலம்பி வருகிறார்கள்.