காமெடி நடிகருக்கு ஜோடியாகும் சாய் பல்லவி - யாருன்னு தெரியுமா..? - ஏன் இந்த விபரீத முடிவு..!


தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. கடந்த சில மாதங்களாக எந்த ஒரு படப்பிடிப்பும் இல்லாத நிலையில் பிரபல நடிகைகள், பட வாய்ப்புகள் இல்லாமல் சோகத்தில் இருக்கின்றனர். 
 
அந்த வகையில் எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் ஏற்று நடிக்க நடிகைகள் தயாராகிவிட்டனர். ஏனென்றால் தற்போது குணச்சித்திர நடிகராக தமிழில் தியா, இறுதிச்சுற்று, மாரி2, என்ஜிகே, சூரரைப்போற்று போன்ற படங்களில் நடித்து அசத்திய காளி வெங்கட்டுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கவிருக்கிறார். 
 
இந்தத் தகவல் ஆனது சாய்பல்லவியின் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் புதிய படம் ஒன்றில் 38 வயதான காளி வெங்கட்டுக்கு ஜோடியாக நடிக்க, நடிகை சாய் பல்லவியிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. 
 
மேலும் சாய்பல்லவி தற்போது தெலுங்கில் ராணாவுடன் விராட பருவம், நாக சைத்தன்யாவுடன் லவ் ஸ்டோரி, பவன் கல்யாணுடன் ஒரு படம் என ஒரு சில படங்களை தன் வசம் வைத்துள்ளார். 
 

அதேபோல் அண்மையில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘பாவக் கதை’ என்ற ஆந்தாலஜி படத்தில் நடித்த சாய்பல்லவிக்கு பலர் தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்தது. இப்படிப்பட்ட வெற்றிகள் பல கண்ட சாய்பல்லவி, காமெடி நடிகரான காளி வெங்கட்டுக்கு ஜோடி சேர்வாரா? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழ தொடங்கியுள்ளது. 
 
இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காமெடி நடிகருக்கு ஜோடியாகும் சாய் பல்லவி - யாருன்னு தெரியுமா..? - ஏன் இந்த விபரீத முடிவு..! காமெடி நடிகருக்கு ஜோடியாகும் சாய் பல்லவி - யாருன்னு தெரியுமா..? - ஏன் இந்த விபரீத முடிவு..! Reviewed by Tamizhakam on February 14, 2021 Rating: 5
Powered by Blogger.