முதன் முறையாக கற்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட எருமசாணி ஹரிஜா.! - ரசிகர்கள் வாழ்த்து..!


பிரபல யூடியூப் சேனலான எருமை சாணியில் நிறைய குறும்படங்கள் நடித்து டாப் ஹீரோயின் ரேஞ்சிற்கு ஒட்டுமித்த இளைஞர்களிடையே பெரும் பிரபலமானவர் ஹரிஜா. 
 
இதன் மூலம் அவருக்கு கிடைத்த பெரும் புகழை வைத்து படங்ககளில் நடிக்கும் வாய்ப்புகளும் கிடைத்தது. கடந்த 2018ம் ஆண்டு தான் கல்லூரி சீனியரும் காதலருமான அமர் ரமேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 
 
திருமணத்திற்கு பிறகு தனது கணவருடன் "திருவிளையாடல்" என்ற புது யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் பல குறும்படங்களில் நடித்து வருகிறார்.ஹரிஜா, அமர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அவருடன் ஷார்ட் பிலிம்களில் ஹரிஜா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் இவர்களது திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் நடைபெற்றது திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து காட்சிகளில் நடித்து வருகிறார் கிரிஜா. தற்போதும் இவருக்கென்று ஒரு தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் இருக்கத்தான் செய்கின்றனர். 
 
மேலும், ஹரிஜாவும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தலை காண்பித்து வருகிறார். அப்படியிருந்தும் எருமை சாணி யூடியூப்பில் அவர் கூறும் " போடா எரும சாணி கிறுக்கு பயலே" என்ற வசனம் இன்னும் இளைஞர்கள் மனதில் இருக்கிறது. 
 

துரு துறுன்னு குழந்தை போல பேசி ரசிக்க வைத்த ஹரிஜா தற்போது இன்ஸ்டாகிராமில் முதன் முறையாக தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

முதன் முறையாக கற்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட எருமசாணி ஹரிஜா.! - ரசிகர்கள் வாழ்த்து..! முதன் முறையாக கற்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட எருமசாணி ஹரிஜா.! - ரசிகர்கள் வாழ்த்து..! Reviewed by Tamizhakam on February 18, 2021 Rating: 5
Powered by Blogger.