ராய் லக்ஷ்மியா இது..? - ஹாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு இருக்காரே..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 
நடிகை ராய்லட்சுமி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் கற்க கசடற என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம்,மலையாளம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். 
 
தமிழ் சினிமா கவர்ச்சிக்கு தற்போது அதிகம் கவனம் செலுத்தும் நடிகைகள் பெரும்பாலானோர் வந்துவிட்டார்கள். அந்தவகையில் கவர்ச்சியே காட்டி தமிழ் சினிமாவில் காஞ்சனா படத்தின் மூலம் பிரபலமான நடிகை ராய் லட்சுமி. 
 
தமிழ் சினிமாவை அடுத்து ஹிந்தியில் அறிமுகமாகி ஜூலி 2 வில் கவர்ச்சி எல்லையில்லாமல் நடித்துள்ளார். இதையடுத்து தமிழ், இந்தி என பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
 
அரண்மனை, இரும்புக்குதிரை படங்களுக்கு பிறகு லாரன்சின் ஒரு டிக்கெட்டுல ரெண்டு சினிமா என்ற படத்தில் மெச்சூரிட்டியான வேடத்தில் நடிக்க கமிட்டானதை அடுத்து, இனிமேல் நான் பர்பார்மென்ஸ் நடிகையாகப்போகிறேன் என்று பில்டப் கொடுத்து வந்தார் ராய்லட்சுமி. 
 
 
அதோடு, தனது பேவரிட் தென்னிந்திய நடிகைகள் சிலரின் பெயரை சொல்லி அவர்களைப்போன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து கிளாமர் ஹீரோயினி என்று என் மீது விழுந்திருக்கும் இமேஜை மாற்றிக்காட்டப்போகிறேன் என்றும் கூறி வந்தார். 
 
ஆனபோதும் அவரைத தேடிச்சென்றது எல்லாமே கவர்ச்சி வேடங்கள்தான். நான் மாறிவிட்டேன் என்னை விட்டு விடுங்கள் என்று அவர் ஓட்டம் பிடித்தபோதும் டைரக்டர்கள் விடுவதாக இல்லை. ராய் லட்சுமி என்றாலே கிளாமர்தான். 
 
அதனால் எங்களால் பர்பார்மென்ஸ் நடிகையாக கற்பனை செய்ய முடியவில்லை என்று தங்களது கருத்தினை அழுத்தம் திருத்தமாக கூறினர். க்ளாமருக்கு பேர்போன நடிகைகளில் இடம்பிடித்து தற்போது கவர்ச்சி நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார். 
 
இந்நிலையில் சமுகவலைத்தளத்திலும் கவர்ச்சி காட்டி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். தற்போது ஹாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு இருக்கும் சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 

 
இதனை பார்த்த ரசிகர்கள் ராய் லக்ஷ்மியா இது..? நம்பவே முடியலையே என்று வாயை பிளந்து வருகிறார்கள்..

ராய் லக்ஷ்மியா இது..? - ஹாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு இருக்காரே..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! ராய் லக்ஷ்மியா இது..? - ஹாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு இருக்காரே..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 24, 2021 Rating: 5
Powered by Blogger.