சினிமா வில்லி என்றால் எப்படி ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி கதாபாத்திரம் நினைவுக்கு வருமோ, அந்த மாதிரி சீரியல் வில்லி என்றால் ராணி நிச்சயம் நினைவுக்கு வருவார்.
இப்போது இருக்கும் பல வில்லி நடிகைகளும், சீரியலில் ராணியை பின்பற்றுகிறார்கள். ஆனால் யாரையும் பின்பற்றாமல், தானே ஒரு பாணியை கட்டமைத்தார் ராணி.
சிகரம் சீரியலில் அறிமுகமான ராணி, கவிதாலயா தயாரிப்பில் இரவு நேர பிரைம் டைம் சீரியலாக ஒளிபரப்பான ’அலைகள்’ சீரியலில் வில்லியாக கவனிக்கப்பட்டார். பின்னர் இவரின் பயணம் சொந்தம், அத்திப்பூக்கள், வள்ளி என்று தொடர்ந்தது.
வில்லி தோற்றத்தில் புதிய அத்தியாயத்தையே உருவாக்கியவர் ராணி.தற்போது வெள்ளித்திரை நடிகர் நடிகைகளுக்கு, நிகராக பார்க்கப்படுகின்றனர், சின்ன திரை நடிகர்களும்.
வெள்ளித்திரை நடிகர்களை விட சின்னத்திரை நடிகர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பதால், வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்காத நடிகைகளின் சாய்ஸ் சின்னத்திரையாக தான் உள்ளது.
சீரியல்களில் வில்லி நடிகைகளுக்கு இலக்கணம் வகுத்து கொடுத்தவர் நடிகை ராணி. அழகிய கண்கள், நல்ல உடற்கட்டு, கம்பீர குரல் வளம் என்று அத்தனை தகுதிகளும் உள்ள நடிகை இவர்.
இப்போது சன் டிவியின் மூன்று சீரியல்களில் நடித்து வருகிறார்.பாண்டவர் இல்லம் சீரியலில் வேதநாயகி கதாபாத்திரம், ரோஜா சீரியலில் சந்திரகாந்தா போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரம்.
வள்ளி சீரியலில் இந்திர சேனா கதாபாத்திரம் என்று நடித்து வெளுத்து வாங்குகிறார்.
பொதுவாக சீரியலில் புடவை சகிதமாகவே தோன்றும் இவர் மிகவும் இறுக்கமான டீசர்ட் அணிந்து கொண்டிருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.