தெலங்கானாவின் கரீம்நகர் மாவட்டம், சப்தகிரி காலனியில் ஒரு சாதாரண வீடு. அங்கு வசித்தவர் கத்தி சுரேஷ். 35 வயதான அவர் ஒரு கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
2015-ஆம் ஆண்டு, அதே பகுதியைச் சேர்ந்த மௌனிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இரண்டு குழந்தைகள். ஆரம்பத்தில் அவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாகவே சென்றது.

ஆனால், காலப்போக்கில் சுரேஷின் மது பழக்கம் தீவிரமடைந்தது. குடித்துவிட்டு வீடு திரும்பும் போதெல்லாம் மனைவியை அடித்து, துன்புறுத்தத் தொடங்கினார். வீட்டில் அமைதி இல்லாமல் போனது. உறவில் விரிசல் விழுந்தது.
மௌனிகா தாங்க முடியாமல் தவித்தாள். சுரேஷ் வேலைக்குச் செல்லாமல், அவளிடமிருந்து பணம் பறித்து செலவு செய்யத் தொடங்கினார். வீட்டுச் செலவு, குழந்தைகளின் படிப்பு எல்லாமே சிரமமானது.
இந்த நெருக்கடியில் மௌனிகா தவறான பாதையில் சென்றாள். பாலியல் தொழிலில் ஈடுபடத் தொடங்கினாள். அதன் மூலம் வரும் பணத்தையும் சுரேஷ் பறித்துக்கொண்டான். அடி, உதை, சித்திரவதை தொடர்ந்தது.
இந்த நிலையில் மௌனிகாவுக்கு அஜய் என்ற இளைஞனுடன் பழக்கம் ஏற்பட்டது. அவனுடன் அக்ரம உறவு வளர்ந்தது. "மீதி வாழ்க்கையை இவனுடன் மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும்" என்ற எண்ணம் அவளை ஆட்கொண்டது. ஆனால், சுரேஷ் தடையாக இருந்தான். அவனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தாள்.

மௌனிகா தனது உறவினர்களிடம் யோசனை கேட்டாள். அப்போது மெடிக்கல் ஏஜென்சி உரிமையாளர் சிவகிருஷ்ணா அறிமுகமானார். "வயாக்ரா, பிபி மாத்திரைகளை அதிக அளவில் கொடுத்தால் இயற்கையான மரணமாகத் தெரியும். யாருக்கும் சந்தேகம் வராது" என்று அவர் யோசனை சொன்னார்.
முதல் முயற்சி: 15 வயாக்ரா மாத்திரைகளை மட்டன் குழம்பில் கலந்து சுரேஷுக்கு பரிமாறினாள். ஆனால், வித்தியாசமான வாசனை வந்ததால் அவன் சாப்பிட மறுத்துவிட்டான். திட்டம் தோல்வி.
இரண்டாவது முயற்சி: செப்டம்பர் 17, 2025 அன்று. மதுவில் பிபி மாத்திரை, தூக்க மாத்திரை கலந்து கொடுத்தாள். சுரேஷ் குடித்துவிட்டு சிறிது நேரத்தில் மயங்கினான். உடனே மௌனிகா மேலே ஏறி தனது புடவையை ஜன்னல் கிரில்லில் மாட்டி, மறுமுனையை அவன் கழுத்தில் சுற்றி இறுக்கினாள்.

தூக்கில் தொங்கவிட்டாள். அஜய் உட்பட மற்றவர்களும் உதவினர். பின்னர், "நாங்கள் இருவரும் உடலுறவில் நெருக்கமாக இருந்தபோது சுயநினைவு இழந்து மயங்கி இறந்துவிட்டார்" என்று உறவினர்களுக்கும் அக்கம் பக்கத்தினருக்கும் தகவல் சொன்னாள்.
உறவினர்கள் விரைந்து வந்து சுரேஷை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவர்கள் "ஏற்கனவே இறந்துவிட்டார்" என்று கூறினர். சுரேஷ் ஆயுள் காப்பீடு எடுத்திருந்ததால், அந்தப் பணத்தை பெற உறவினர்கள் முயன்றனர். காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய வற்புறுத்தினர்.
ஆனால், மௌனிகா அதற்கு ஆர்வம் காட்டவில்லை. கட்டாயத்தால் மட்டுமே ஒப்புக்கொண்டாள். இதுவே அவளுக்கு எதிராக மாறியது. போலீசார் விசாரணையில் சுரேஷின் கழுத்தில் காயங்கள் இருப்பது தெரிய வந்தது. மௌனிகாவின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்தின.

கிடுக்குப்பிடி விசாரணையில் உண்மை வெளியானது. மௌனிகா, அஜய், சிவகிருஷ்ணா, ஸ்ரீஜா, சந்தியா (ராதா), தேவதாஸ் ஆகிய ஆறு பேரும் சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்தது தெரிய வந்தது. அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இரண்டு குழந்தைகள் இப்போது நிற்கதியாக நிற்கின்றன. ஒரு காலத்தில் காதலில் தொடங்கிய உறவு, மது, பண பிரச்சினை, துரோகம், கொலை என்று முடிந்தது. காதலும் குடும்பமும் எப்படி அழிவின் பாதையில் செல்லும் என்பதற்கு இது ஒரு வேதனையான எச்சரிக்கை கதை.
Summary in English : In Karimnagar, Telangana, a couple's marriage deteriorated due to the husband's drinking and financial demands. The wife, seeking escape, formed a new relationship and planned with others to end the situation. After failed attempts, the husband died under suspicious circumstances. Police investigation led to the arrest of six people. The two children are now without parents.

