கவர்ச்சி உடையில் டாப் ஆங்கிள் செல்ஃபி - இளசுகளின் கவனத்தை சுண்டி இழுக்கும் நடிகை தீபிகா ரங்கராஜூ..!

 
பிரபல இளம் நடிகை தீபிகா ரங்கராஜு. இவர் "ஆறடி" என்ற தமிழ் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன்பின்னர் சின்னத்திரையில் சில சீரியல்களில் நடித்துள்ளார். 
 
செய்தி வாசிப்பாளராக தனது வாழக்கை பயணத்தை தொடங்கிய தீபிகா ரங்கராஜ்.அதன் பிறகு, லக்ஷ்மி கல்யாணம் என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்துள்ளார். சீரியலில் பிரபலமான இவருக்கு "ஆறடி" என்ற தமிழ் படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். 
 
கடலூரில் பிறந்த இவர் எந்த விதமான சினிமா பின்னணியும் இன்றி சினிமாவுக்குள் நுழைந்தவர். சினிமா, சீரியல் என எதற்கும் இவர் குடும்பத்தில் அனுமதிக்கவில்லை என்றும் பல முறை எடுத்து சொல்லி பிறகு அவர்களின் சம்மதத்துடன் மீடியா பக்கம் வந்தவர் இவர். 
 
 
ஹீரோக்களுடன் சேர்ந்து டூயட் பாடும் கதாபாத்திரங்களை விடவும், கதாநாயகியின் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடிக்கவே இவர் விரும்புகிறார். நடிகர் அஜித்தின் தீவிர ரசிகையான இவர் அவரது நடிப்பையும், நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பையும் கூர்ந்து கவனிக்கிறாராம். 
 
 
சினிமா உலகில் இருப்பவர்களுக்கு விளம்பரம் மிகவும் அவசியம். ஏதாவது ஒரு வகையில் ரசிகர்கள் கண்ணில் பட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அதற்கு சமூக ஊடகங்கள் பெரிதும் உதவுகின்றன என்பதை நம்புகிறார் அம்மணி.ஆனால், மற்ற நடிகைகளை போல ஏனோ தானோ என கவர்ச்சியை காட்டாமல் பக்கத்துக்கு வீட்டு பெண் போல எளிய உடைகளில் குடும்பப்பாங்கான புகைப்படங்களை மட்டுமே அப்லோட் செய்கிறார். இவருடைய சமீபத்திய செல்ஃபி புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. 
 
இதனை பார்த்த ரசிகர்கள் கவிதைகள் மூலம் இவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.

கவர்ச்சி உடையில் டாப் ஆங்கிள் செல்ஃபி - இளசுகளின் கவனத்தை சுண்டி இழுக்கும் நடிகை தீபிகா ரங்கராஜூ..! கவர்ச்சி உடையில் டாப் ஆங்கிள் செல்ஃபி - இளசுகளின் கவனத்தை சுண்டி இழுக்கும் நடிகை தீபிகா ரங்கராஜூ..! Reviewed by Tamizhakam on February 17, 2021 Rating: 5
Powered by Blogger.