அப்படி நடிக்கவும் தயார் - வெளிப்படையாக கூறிய நடிகை சுரபி..!

 

தமிழில் இவன் வேற மாதிரி எனும் படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின் பல தமிழ் வெற்றிப் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமாகிய நடிகை தான் சுரபி. 

அதன் பின்பு அவர் தமிழில் அவ்வளவாக படங்களில் நடிக்கவில்லை. தமிழில் வாய்ப்புகள் குறைந்ததால் தெலுங்கு திரையுலகில் கலக்கி வந்தார். இந்நிலையில் தற்போது பிரபல இயக்குனர் சுனி  அவர்களின் இயக்கத்தில் இவர் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார்.

இந்தப்படம் பெங்களூருவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. நடிகை சுரபி தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளராக நடிக்கிறார். 

 முன்னணி நடிகையாக முடியல

இந்த மாதம் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்க உள்ளது. படத்திற்கான கதாநாயகன் மற்றும் துணை நடிகர்கள் ஆகியவர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. இந்த படத்தை கேபிஎன் புரோடக்சன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.

 
நடிகை சுரபி தற்போது ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக அடங்காதே என்ற தமிழ் படத்திலும் 3 தெலுங்கு படங்களிலும், ஒரு கன்னட படத்திலும் நடித்து வருகிறார். கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேல் சினிமாவில் இருக்கிறார் அம்மணி. 
 
இருப்பினும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. எனவே பட வாய்ப்புகளை பிடிக்க அரைகுறை ஆடையில் கிளாமரான கதாபாத்திரங்களில் நடிக்க முடிவு செய்துள்ளாராம் சுரபி. 
 

கவர்ச்சிக்கு ரெடி

 
இதுகுறித்து அவர் சமீபத்திய பேட்டியில் கூறும்போது, “நான் படங்களில் துறுதுறு பெண்ணாக நடிக்க விரும்புகிறேன். குறும்புத்தனம் மற்றும் ஆதிக்கம் செலுத்தும் மனப்பான்மை உள்ளோரை எனக்கு பிடிக்கும். எனக்கு யார் மீது காதல் வருகிறதோ அவரை திருமணம் செய்து கொள்வேன். 


 
சுரபி சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். அதுமட்டுமின்றி கிளாமராக நடிக்கவும் தயாராக இருக்கிறேன்'' என்றார். நடிகை சுரபி தற்போது ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக அடங்காதே என்ற தமிழ் படத்திலும் 3 தெலுங்கு படங்களிலும், ஒரு கன்னட படத்திலும் நடித்து வருகிறார்.

அப்படி நடிக்கவும் தயார் - வெளிப்படையாக கூறிய நடிகை சுரபி..! அப்படி நடிக்கவும் தயார் - வெளிப்படையாக கூறிய நடிகை சுரபி..! Reviewed by Tamizhakam on March 15, 2021 Rating: 5
Powered by Blogger.