எனக்கு பிடித்த பணிகளில் இதுவும் ஒன்று - VJ பாவனா ஓப்பன் டாக்..!


தமிழ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினிகள் பலரும் அடக்க ஒடுக்கமாக தான் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுவார்கள். 
 
ஆனால், பிரபல தொகுப்பாளினியாக இருக்கும் பாவனா பாலகிருஷ்ணன் ஸ்டைலான உடைகளில் தான் தோன்றுவர். பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் பாவனா பாலகிருஷ்ணன். 
 
இவர் அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி No.1, சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானார். மேலும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சில முக்கியமான நிகழ்ச்சிகளையும் இவரே முன் நின்று தொகுத்து வழங்கியுள்ளார்.
 
இதன்பின், சில மாதங்களாக இவரை எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பார்க்க முடியவில்லை. ஏனென்றால் இவர் பிரபல விளையாட்டு தொலைக்காட்சி சென்றது தான் காரணம். 
 
மேலும், அதில் ஒளிபரப்பான ஐ.பி.எல், கிரிக்கெட் உலக கோப்பை 2019 போன்ற பிரமான்டமான கிரிக்கெட் நிகழ்ச்சிகளை முன் நின்று தொகுப்பாளினியாக தொகுத்து வாழங்கி வந்தார். 
 
இதன்பின், இவரின் சமூக வலைத்தள பக்கத்தில் கிரிக்கெட் பிரபலங்களுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை அவ்வப்போது வெளியிடுவார். மேலும், கிரிக்கெட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது எனக்கு மிகவும் பிடித்த பணிகளில் ஒன்று என்று சமீபத்திய பேட்டி கூறியுள்ளார்.

எனக்கு பிடித்த பணிகளில் இதுவும் ஒன்று - VJ பாவனா ஓப்பன் டாக்..! எனக்கு பிடித்த பணிகளில் இதுவும் ஒன்று - VJ பாவனா ஓப்பன் டாக்..! Reviewed by Tamizhakam on April 04, 2021 Rating: 5
Powered by Blogger.