"அடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே..." - கர்ணன் ரஜிஷா வெளியிட்ட புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..!

 
மலையாளத்தில் முன்னணி நடிகையும் கர்ணன் படத்தின் கதாநாயகியுமான ரஜிஷா விஜயன் தான் வயசு பசங்களின் லேட்டஸ்ட் க்ரஷ். மலையாளத்தில் முன்னணி நடிகையான ரஜிஷா விஜயன் கர்ணன் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். 
 
கர்ணன் படத்தை மாரி செல்வராஜ் இயக்க கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். ஊருக்கு அடங்காமல் சுற்றி திரியும் கர்ணனை ஒற்றை முத்தத்தை கொடுத்து "தட்டான் தட்டான் வண்டிகட்டி, பறந்தேன் கோழி தூவாட்டம்" என்று தன் பின்னால் சுற்ற விட்ட திரவுபதியாக கலக்கியிருந்தார் அம்மணி.
 
ரஜிஷா விஜயன் சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘பைனல்ஸ் என்ற ஸ்போர்ட்ஸ் படத்தில் நடித்தபோது சின்ன விபத்து ஏற்பட்டு காலில் கட்டு போட்டிருந்தேன். அப்போதுதான் கர்ணன் படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. தாணு சார் அலுவலகத்தில் தான் கதை கேட்டேன். கதை கேட்டதும் மிகவும் பிடித்துவிட்டது. என்னுடைய ஜூன் படம் பார்த்துவிட்டு தான் என்னை தேர்வு செய்ததாக மாரி செல்வராஜ் கூறினார். 
 
ஒரு படத்தில் என்னுடைய கதாபாத்திரம் என்ன என்பதுதான் முக்கியம். உடையோ அலங்காரமோ அல்ல. அதே சமயம் என் உடல்வாகுக்கு பொருத்தமான உடை தான் அணிந்து நடிக்க முடியும். நான் ஒரு மண் மாதிரி. 
 
 
அதை அழகாக உருவாக்குவது டைரக்டர் கைகளில் தான் இருக்கிறது. கர்ணன் படத்திலேயே எனக்கு மேக்கப் கிடையாது. படப்பிடிப்பு தொடங்குவதற்கு 10 நாட்கள் முன்பே அந்த ஊருக்கு சென்று தங்கிவிட்டேன். அதனால் அந்த ஊர் பெண்ணாகவே மாறிவிட்டேன்’ என்றார்.
 
 
கடந்த 2019ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஃபைனல்ஸ் எனும் படத்தில் ஒலிம்பிக் போட்டிக்காக சைக்கிள் வீராங்கனையாக நடித்திருந்தேன். அதற்கு முன்பு வரை சைக்கிள் ஓட்டி எனக்கு பழக்கமில்லை.
 

அந்த படத்திற்காக சைக்கிள் பயிற்சி எடுத்து நடித்த போது, ஒரு ரிஸ்க்கான காட்சியின் போது விழுந்து அடிபட்டு விட்டது. ஆனால், அதை பொருட்படுத்தாமல் தான் மற்ற படங்களில் நடனம் உள்ளிட்ட காட்சிகளில் நடித்து வருகிறேன் என்றார்.
 
இந்நிலையில், கோயிலில் நின்றபடி சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் "அடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே..." என்று பாடல் பாடி வருகிறார்கள்.

"அடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே..." - கர்ணன் ரஜிஷா வெளியிட்ட புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..! "அடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே..." - கர்ணன் ரஜிஷா வெளியிட்ட புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on May 16, 2021 Rating: 5
Powered by Blogger.