பென்ஸ் காருக்கு உரிமையாளரான தொகுப்பாளினி மஞ்சுஷா..! - வைரல் புகைப்படம்..!


இளம் தொகுப்பாளினி மஞ்சுஷா ராம்பல்லி. தெலுங்கு சேனல்களில் ஹாட் குயினாக வலம் வந்து கொண்டிருக்கும் இவருக்கு சினிமா பட வாய்ப்புகள் வந்து கொண்டிருகின்றன. 
 
பிடித்த கதையில் மட்டுமே நடிப்பேன்,சினிமாவில் நடிக்க வேண்டுமே என்று எதாவது ஒரு துக்கடா கதையில் நடிக்க நான் விரும்பவில்லை என்கிறார் அம்மணி. பல தெலுங்கு பிரபலங்களை பேட்டி எடுத்துள்ள இவர் தற்போது சினிமா சார்ந்த நிகழ்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். 
 
சினிமாவில் முத்திரை பதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தையும், சினிமா இயக்குனர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து வருகிறார். 
 
சமூக வலைதளங்களில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பாலோவர்களை கொண்ட இவர். அவர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை அப்லோடி வருகிறார். 
 
இந்நிலையில், தன்னுடைய புதிய பென்ஸ் காரின்புகைப்படத்தை அப்லோட் செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

பென்ஸ் காருக்கு உரிமையாளரான தொகுப்பாளினி மஞ்சுஷா..! - வைரல் புகைப்படம்..! பென்ஸ் காருக்கு உரிமையாளரான தொகுப்பாளினி மஞ்சுஷா..! - வைரல் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on May 04, 2021 Rating: 5
Powered by Blogger.