கோலிவுட் ரசிகர்களை பரபரப்பில் ஆழ்த்திய ஒரு செய்தி இப்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
நடிகர் துருவிக்ரம் (துர்விக்ரம்) மற்றும் நடிகை அனுபாமா பரமேஸ்வரன் இடையே காதல் உறவு இருப்பதாக நீண்ட காலமாக ருமர்கள் உலா வந்த நிலையில், தற்போது அவர்களுக்கிடையே பிரிவு ஏற்பட்டிருக்கலாம் என்ற தகவல்கள் பலமாக எழுந்துள்ளன.

ருமர்கள் எப்படி தொடங்கின?
'பைசன்' (Bison) படப்பிடிப்பின்போது இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு முடிந்த பிறகு, இருவரும் ஒரே Spotify பிளேலிஸ்ட்டை பகிர்ந்துகொண்டது, விருது விழாவில் ஒருவருக்கு ஒருவர் அளித்த அன்பான வாழ்த்துகள், இதய ஈமோஜி உடன் பகிரப்பட்ட செல்பி போன்றவை ரசிகர்களை காதல் உறவு இருப்பதாக நம்ப வைத்தன.
இருவரும் நேரடியாக உறவை உறுதிப்படுத்தவில்லை என்றாலும், அவர்களது சமூக ஊடகப் பதிவுகளின் பின்னணி ஒத்திருப்பது, ரசிகர்கள் இருவரது புகைப்படங்களை ஒப்பிட்டு பகிர்வது போன்றவை ருமர்களுக்கு உறுதியளித்தன.
ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவர்கொண்டா ஜோடியைப் போல மறைமுகமாக தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி வந்ததாக பலரும் கருத்து தெரிவித்தனர்.
அனுபாமாவின் புதிய இன்ஸ்டாகிராம் போஸ்ட் பரபரப்பை ஏற்படுத்தியது
இந்த நிலையில், அனுபாமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு உணர்ச்சிகரமான போஸ்ட்டை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
"சில நேரங்களில் நம்ம சந்தோஷமா இருக்கணும்னா சில விஷயங்களை விட்டுட்டுத்தான் முன்னாடி போகணும். இன்னைக்குதான் எனக்கு உண்மையான நிம்மதி கிடைச்சிருக்கு. இனிமே என்னோட லைஃபை நான் என்னோட இஷ்டத்துக்கு வாழப் போறேன்.
யார் கிட்டையும் அனுமதி கேட்க வேண்டியது இல்லை. எந்த பயமும் இல்லை. கொஞ்சம் கொஞ்சமா என்னை நானே திரும்ப கண்டுபிடிச்சு, ஒரு காலத்துல மறந்து போன சந்தோஷத்தை திரும்ப அனுபவிக்கப் போறேன்..."
மேலும், "ஐ லவ் யூ ஆல்" என்று ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, யூனிவர்ஸுக்கு நன்றி சொல்லி, புதிய ஆரம்பம் என்றும் குறிப்பிட்டுள்ளார். போஸ்ட்களில் புகைப்படங்களை பகிரும்போது யாருடைய அப்ரூவலுக்கும் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை, எந்த சாங் போட வேண்டும், எந்த கேப்ஷன் வேண்டும் என மற்றவர்கள் சொல்ல வேண்டியதில்லை என்று சந்தோஷமாக குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த கேப்ஷன் மறைமுகமாக தனது முந்தைய உறவில் சந்தித்த சிரமங்களை குறிப்பிடுவதாக ரசிகர்கள் பேசி வருகின்றனர். மேலும், அனுபாமா துருவிக்ரத்தை இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் பிரேக் அப் ருமர்கள் வலுத்துள்ளன. சிலர் அனுபாமா துருவிக்ரத்தின் அன்பால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.
துருவிக்ரம் தரப்பில் இதுவரை எந்த பதிலும் இல்லை
இதுவரை துருவிக்ரமோ அல்லது அனுபாமாவோ இந்த ருமர்களுக்கு நேரடியாக பதில் அளிக்கவில்லை. இருவரும் முன்பு போல ஒருவரை ஒருவர் டேக் செய்து பதிவுகள் போடவில்லை. இந்த சூழலில், இருவரது நேரடி விளக்கமே உண்மையை உறுதிப்படுத்தும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ரசிகர்களின் எதிர்வினை
சமூக ஊடகங்களில் இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலர் அனுபாமாவுக்கு ஆதரவு தெரிவித்து "புதிய தொடக்கம், சந்தோஷமாக இருங்கள்" என்று கருத்து தெரிவிக்கின்றனர். மற்றவர்கள் இருவரும் இணைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று வருத்தம் தெரிவிக்கின்றனர். இருப்பினும், இது வெறும் ஊகங்கள் மட்டுமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இருவரது ரசிகர்களும் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கைக்கு மரியாதை கொடுத்து, அவர்களது வரவிருக்கும் படைப்புகளை ஆதரிப்போம். மேலும் புதிய தகவல்கள் வெளியானால் உடனடியாக பகிர்வோம்!
English Summary : Rumours of a relationship between actors Dhruv Vikram and Anupama Parameswaran have been circulating for some time based on their social media posts. Recently, Anupama shared an emotional Instagram post about finding peace, freedom, and a fresh start, leading fans to speculate about a possible separation. Neither has commented officially yet.