இந்த வயசுலயும் இப்படியா..? - சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!

 
2003ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட ஆனந்தம் சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை லட்சுமி வாசுதேவன். இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தார். 
 
இவர் தற்பொழுது விஜய் டிவியில் பல சீரியல்களில் அம்மா கேரக்டரில் நடித்து வருகிறார். இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இவருக்கு தற்போது 36 வயதாகும் நிலையில் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு தனது கவர்ச்சியா புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்தவகையில் மிகவும் குட்டியான டீசர்ட் மற்றும் டவுசரை அணிந்துகொண்டு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 
 
இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடி வருகிறார்கள்.சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அவர் `சோஷியல் மீடியாவில் என் ஒரு போட்டோவை அப்லோடு பண்ணினா, `நீங்க இளமையா இருக்கீங்க; உங்க இளமை ரகசியம் என்ன?, நீங்க ஏன் அம்மா ரோலில் நடிக்கிறீங்க?'னு நிறைய கமென்ட்ஸ் வரும். 
 
 
அதெல்லாம் எனக்குக் கோபத்தையே உண்டாக்கும். அம்மா ரோலில் நடிச்சாலும், என் மகளாக/மகனாக நடிக்கிறவங்களுக்கும் எனக்கும் சில வயசுதான் வித்தியாசம் இருக்கும். கேரக்டர்படிதான் 50 பிளஸ்ல என் வயசு இருக்கும். நிஜத்திலும் அந்த வயதில் இருக்கணும்னு அவசியமில்லையே. என் பொண்ணு காலேஜ் படிக்கிறாள். 
 
 
அப்போ, என் வயசு என்ன இருக்கும்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க. உடல்நலம், அழகில் எனக்கு எப்போதும் ஆர்வம் உண்டு. அதனால், இளமையா இருக்கேன். அது மிக அவசியம் என நம்புறேன். வெளியிடங்களில் என் அழகு மற்றும் தோற்றம் பற்றி நிறையக் கேள்விகள் கேட்பாங்க. 


அதனால், `ஏன்தான் அம்மா ரோலில் நடிக்க ஆரம்பிச்சோமோ'னு சில நேரங்களில் வருத்தப்பட்டதுண்டு. இனி அம்மா ரோலில் நடிக்கக் கூடாதுனுகூட சில நேரங்களில் நினைப்பேன். என்று கூறியுள்ளார்.

இந்த வயசுலயும் இப்படியா..? - சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..! இந்த வயசுலயும் இப்படியா..? - சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on May 02, 2021 Rating: 5
Powered by Blogger.