2026-ல் முதல்வர் ஆகப்போவது இவர் தான்..மகரிஷி ஓலையில் எழுதிய அற்புதம்! தேர்தல் முடிவை சொன்ன ஜோதிடர்!

சிதம்பரம்: டிவைன் நாடி யூட்யூப் சேனலில் கந்தவேல் என்ற ஜோதிடர் கூறிய மகரிஷி பிரசன்னத்தில், பராபவ வருடத்திற்கான முக்கிய பலன்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தேர்தல் நெருங்கும் நிலையில் (ஏப்ரல் 23), மகரிஷி கிரக நிலைகளை அடிப்படையாகக் கொண்டு பல முக்கிய எச்சரிக்கைகளை வழங்கியுள்ளார்.

வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் – உடல்நல அபாயம்

மகரிஷி கூறியபடி, இந்த ஆண்டு சித்திரை-வைகாசி மாதங்களில் வெப்பத்தின் தாக்கம் கடந்த காலங்களை விட மிக அதிகமாக இருக்கும்.

உடல் உஷ்ணம் அதிகரிப்பதால் பல்வேறு நோய்கள், குறிப்பாக அம்மை போன்ற தொற்றுகள் பரவும் அபாயம் உள்ளது.

கர்ப்பிணிகளுக்கு (மங்கையர்) கரு நிலைப்பதில் சிக்கல், கர்ப்ப சிதைவு (அபார்ஷன்) அபாயம் அதிகம். சிறுநீரகப் பிரச்சனைகள், யூரினரி தொற்றுகள் உள்ளிட்டவையும் எச்சரிக்கப்பட்டுள்ளன.

ஆலோசனை:

குளிர்பானங்கள், ஐஸ் வாட்டர் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். மண் பானை/செப்பு பாத்திரங்களில் தண்ணீர், சப்ஜா/சியா சீட்ஸ், பாதாம், கற்றாழை சோற்று, மோர்-கருஞ்சீரகம் கலவை போன்ற இயற்கை முறைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொருளாதார சங்கடங்கள்

பணப் பிரச்சனைகள், வங்கி டெபாசிட்டுகளை சரியான நேரத்தில் எடுக்க முடியாத நிலை, எரிபொருள் (கேஸ், பெட்ரோல்) தட்டுப்பாடு தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வீடுகளில் கேஸ் சிலிண்டர் தாமதம், வாகனங்களில் எரிபொருள் நெருக்கடி, மின்சார/மரபு சமையல் முறைகளுக்குத் திரும்பும் சூழல் உருவாகும் என்று கூறப்பட்டது.

அரசியல் – எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கும் சூட்சிகள்தமிழகம் உட்பட இந்திய அளவில் உயர் மாந்தோர் (ஆளும் தரப்பினர்) வருந்தும் நிலை உருவாகும்.

வடக்கு திசை சூட்சிகளும், தென் திசை (தமிழக) சேவையாளர்களுக்கும் மதம் சார்ந்த சங்கடங்கள், ஒற்றுமைக்கு கலக்கங்கள் ஏற்படும் என மகரிஷி குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய கணிப்புகள்:

  • தெளிவான மெஜாரிட்டி இல்லாத நிலை.
  • கூட்டணி ஆட்சி (தயவு/உதவியுடன்) அமையும்.
  • புதுமையான கட்சிகள்/ஆளுமைகளின் தாக்கம்.
  • பலரின் எதிர்பார்ப்புகள், கருத்துக் கணிப்புகள் பொய்யாகும்.
  • ஆட்சியில் நிலையற்ற தன்மை, எதிர்ப்புகள், சட்ட மாற்றங்கள், பதவி இழப்புகள் சாத்தியம்.
  • தர்மத்திற்கு ஆதரவு, அதர்மத்திற்கு ஆதரவு இல்லை என்பது மகரிஷியின் உறுதியான கருத்து.

இந்த பிரசன்னம் தில்லைவாள் தேவனவன் அடிகள் போற்றிய அகத்தியர் ஓலை அடிப்படையில் எடுக்கப்பட்டது. கிரக நிலைகள் (புதன் நீசம், சனி-செவ்வாய் சேர்க்கை உள்ளிட்டவை) அடிப்படையில் இந்த பலன்கள் வாசிக்கப்பட்டன.

கந்தவேல் சார் கூறியது:

“அரசியலை ஆதரிக்கவோ எதிர்க்கவோ இல்லை. மகரிஷியின் வார்த்தைகளை நேர்மையாகப் பகிர்வதே நோக்கம்” என்று தெரிவித்தார்.இந்த நாடி பலன்கள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

உடல்நலம், பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

Summary in English : In Parabhava year, intense heat is expected to rise, causing various health issues including skin problems and difficulties for expectant mothers. Fuel shortages and financial strains may continue. Politically, no clear majority is foreseen, leading to coalition governance with surprises and policy changes.