" திடீரென என் பக்கத்தில் வந்து என்னை உரசி அசிங்கமாக..." - மோசமான அனுபவத்தை ஓப்பனாக கூறிய சீரியல் நடிகை ராணி..!

 
சீரியல்களில் வில்லி நடிகைகளுக்கு இலக்கணம் வகுத்து கொடுத்தவர் நடிகை ராணி. அழகிய கண்கள், நல்ல உடற்கட்டு, கம்பீர குரல் வளம் என்று அத்தனை தகுதிகளும் உள்ள நடிகை இவர். இவர் சன் டிவியில் சீரியல்கள் ஆரம்பித்த காலத்தில் இருந்து சீரியல்களில் வில்லியாக நடித்து வருகிறார். 
 
அப்போது சீரியல்களில் வில்லி என்றால் அவர்களுக்கு ரோல் மாடல் என்று யாரும் கிடையாது. தாங்களே ஒரு வில்லி மாடல் வைத்து நடித்தால் மட்டும் உண்டு.அப்படி நடித்து புகழ் பெற்றவர் நடிகை ராணி. 
 
இவர் பேசி நடிக்கும் பாணியை பல நடிகைகளும் தங்களது வில்லி வேடங்களுக்கு பின்பற்றினார்கள்.பல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிரான்க் நிகழ்ச்சி மூலம் பாதிக்கப்பட்டு, ஒரு வாரம் வரை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றதாக கூறியுள்ளார் பிரபல சீரியல் நடிகை ராணி.
 
 
தற்போது வெள்ளித்திரை நடிகர் நடிகைகளுக்கு, நிகராக பார்க்கப்படுகின்றனர், சின்ன திரை நடிகர்களும். வெள்ளித்திரை நடிகர்களை விட சின்னத்திரை நடிகர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பதால், வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்காத நடிகைகளின் சாய்ஸ் சின்னத்திரையாக தான் உள்ளது.
 
இப்படி பல சீரியல்களில் தன்னுடைய வில்லத்தனமான நடிப்பு மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நடிகை ராணி. இவரின் தனித்துவமான நடிப்புக்கு பல ரசிகர்கள் உள்ளனர். இவர் சமீபத்தில் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட பிரான்க் நிகழ்ச்சியால் பாதிக்கப்பட்டது குறித்து முதல் முறையாக கூறியுள்ளார். 
 
 
இது குறித்து அவர் கூறுகையில், ஒரு முறை ஷூட்டிங் ஸ்பாட்டில், உணவு நேரத்தின் போது ஒருவர் தன்னை ரசிகர் என தன்னிடம் அறிமுக படுத்திக்கொண்டார். பின் ஆட்டோகிராப், மற்றும் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என என்னிடம் கூறினார். 
 
நானும் மறுக்காமல் அவருக்கு ஆட்டோகிராப் போட்டுக்கொடுத்ததோடு புகைப்படமும் எடுத்துக்கொண்டேன். திடீர் என என் பக்கத்தில் வந்து என்னை உரசி அசிங்கமாக நடந்து கொண்டார். 


நான் கோபமாக என்ன வேண்டும் என கேட்க அவர் நீ தான் வேண்டும் என கூறியதும் அதிர்ச்சியடைந்தேன். பின் தன்னுடைய காதின் அருகில் வந்து கத்தி விட்டு ஓடிவிட்டார். 
 
பின்பு தான் தெரிந்தது அது ஒரு பிராங்க் ஷோ என்று, இந்த நிகழ்ச்சியால் ஏற்பட்ட பாதிப்பு தன்னை மனதளவில் மிகவும் பாதித்தது. இதற்காக ஒரு வாரம் மருத்துவ மனையில் சிகிச்சை எடுத்து திரும்பியதாக முதல் முறையாக பிரான்க் ஷோ பற்றிய தன்னுடைய அனுபவத்தை கூறியுள்ளார்.

" திடீரென என் பக்கத்தில் வந்து என்னை உரசி அசிங்கமாக..." - மோசமான அனுபவத்தை ஓப்பனாக கூறிய சீரியல் நடிகை ராணி..! " திடீரென என் பக்கத்தில் வந்து என்னை உரசி அசிங்கமாக..." - மோசமான அனுபவத்தை ஓப்பனாக கூறிய சீரியல் நடிகை ராணி..! Reviewed by Tamizhakam on June 13, 2021 Rating: 5
Powered by Blogger.