"நீ ஐட்டம் தானே..." என்று கேட்ட ரசிகருக்கு டிக் டாக் இலக்கியா கொடுத்த பதிலை பாருங்க..!


2018-ம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவின் கவர்ச்சி பாடல்களை மட்டும் தேர்வு செய்து அந்தப் பாடலுக்கு உணர்ச்சிப்பூர்வமாக நடித்து டிக்டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு வந்தவர் இலக்கியா. டிக்டாக்கில் கணக்கு தொடங்கிய சில மாதங்களிலேயே அதில் பிரபலமானார். 
 
இவரது டிக் டாக் வீடியோக்கள் லட்சக்கணக்கான லைக்ஸ்களை பெற்றிருந்த நிலையில் கடந்த ஆண்டு அந்த செயலிக்கு மத்திய அரசு தடைவிதித்தது. டிக்டாக் மூலம் பிரபலமான இலக்கியா தமிழ் சினிமாவில் ‘நீ சுடத்தான் வந்தியா’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாக இருக்கிறார். 
 
இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் இலக்கியா அச்செயலியில் உள்ள ரீல்ஸ் என்ற வசதியைப் பயன்படுத்தி பல்வேறு பாடல்களுக்கு கவர்ச்சியாக நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகிறார். 
 
அந்த வீடியோக்கள் நெட்டிசன்களின் லைக்ஸ்களைப் பெற்று வருகிறது. டிக் டாக் இல்லாத குறையை இலக்கியாவுக்கு இன்ஸ்டாகிராமின் ரீல்ஸ் வசதி பூர்த்தி செய்துள்ளது என்றே இதன் மூலம் தெரிய வருகிறது. 
 

 
இந்நிலையில், நேரலையில் ரசிகர்களுடன் உரையாடிய இலக்கியாவிடம்.. நீ ஐட்டம் தானே என்று ஆசாமி ஒருவர் கேள்வி கேட்க.. ஆமா ஐட்டம் தான் என்று கூலாக பதிலளித்துள்ளார். இந்த வீடியோ, இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

"நீ ஐட்டம் தானே..." என்று கேட்ட ரசிகருக்கு டிக் டாக் இலக்கியா கொடுத்த பதிலை பாருங்க..! "நீ ஐட்டம் தானே..." என்று கேட்ட ரசிகருக்கு டிக் டாக் இலக்கியா கொடுத்த பதிலை பாருங்க..! Reviewed by Tamizhakam on July 20, 2021 Rating: 5
Powered by Blogger.