"அடப்பாவிகளா.. டேய்..." - காரில் ஏற முடியாமல் சிக்கிய நயன்தாரா - முன்னால் காதலன் பெயரை கோஷம் போட்ட ரசிகர்கள்..!


டைரக்டர் விக்னேஷ் தனது நான்காவது படமாக காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் லீட் ரோலில் நடிக்கிறார்கள். விஜய் சேதுபதி ஏற்கனவே சமந்தா மற்றும் நயன்தாராவுடன் தனித்தனியாக இணைந்து நடித்துள்ளார். 
 
ஆனால் நயன்தாராவும், சமந்தாவும் ஒரே படத்தில் இணைந்து நடிப்பது இதுதான் முதல் முறை. இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாரா அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகைகளில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார். 
 
சமீபத்தில் நயன்தாரா பார்வை இழந்தவராக நடித்த நெற்றிக்கண் படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. ரஜினியுடன் அண்ணாத்த படத்தை முடித்துவிட்டு தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். இதில் நாயகனாக விஜய்சேதுபதி நடிக்கிறார். சமந்தாவும் இன்னொரு நாயகியாக வருகிறார். 
 
நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். முக்கோண காதல் கதையான இந்த படம் ரொமான்டிக் காமெடி கதையாக உருவாகி வருகிறது. இந்த படத்தின் ஷுட்டிங்கில் கலந்து கொள்ள லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் சமீபத்தில் புதுச்சேரி சென்றுள்ளார். 
 
அப்போது ஷுட்டிங் முடிந்து திரும்பிய நயன்தாராவை ரசிகர்கள் சுற்றி வளைத்துக் கொண்டுள்ளனர்.இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படப்பிடிப்பை காண தினமும் ரசிகர்கள் திரள்கிறார்கள். 
 
இந்த நிலையில் படப்பிடிப்பை முடித்து விட்டு காரில் ஏற வந்த நயன்தாரா ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கினார். அவருடன் ‘செல்பி’ எடுக்கவும் கைகுலுக்கவும் ரசிகர்கள் முண்டியடித்தனர். மேலும், STR.. STR.. என கோஷம் போடவும் ஆரம்பித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 
 

 
பாதுகாவலர்கள் ரசிகர்களை அப்புறப்படுத்தி நயன்தாராவை பாதுகாப்பாக காரில் ஏற்றினர். காருக்குள் இருந்தபடி ரசிகர்களை பார்த்து நயன்தாரா கையசைத்தபடி சென்றார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.

"அடப்பாவிகளா.. டேய்..." - காரில் ஏற முடியாமல் சிக்கிய நயன்தாரா - முன்னால் காதலன் பெயரை கோஷம் போட்ட ரசிகர்கள்..! "அடப்பாவிகளா.. டேய்..." - காரில் ஏற முடியாமல் சிக்கிய நயன்தாரா - முன்னால் காதலன் பெயரை கோஷம் போட்ட ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 24, 2021 Rating: 5
Powered by Blogger.