"திருமணம் நடந்த ஒரே வருடத்தில் விவாகரத்து.. - ஆனால்,..." - பலரும் அறிந்திடாத நடிகை சுகன்யாவின் மறுபக்கம்..!


சினிமாவில் உள்ள நடிகைகள் பெரும்பாலும் விவாகரத்தானவர்களாக தான் இருப்பார்கள். எனில் சினிமாவைப் போல வீட்டிலும் கொஞ்சம் வாய் அதிகமாக இருப்பதால் இந்த பிரச்சனை. 
 
இருந்தாலும் 90 களில் மிக முக்கிய நடிகையாக வலம் வந்தவர் சுகன்யா. நடிகையாக மட்டுமில்லாமல் பரதநாட்டிய டான்ஸர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர். 
 
அன்றைய கால முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி போட்ட சுகன்யா அதன் பிறகு மார்க்கெட் இல்லாத நிலையில் சீரியலிலும் நடித்து பிரபலம் அடைந்தார். அதிலும் சன் டிவியில் அவர் நடித்த ஆனந்தம் நாடகம் சூப்பர் ஹிட் அடித்தது. சுகன்யா 2002 ஆம் ஆண்டு ஸ்ரீதர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 
 
ஆனால் இந்த திருமணம் நீண்ட நாட்களாக நிலைக்கவில்லை. வெறும் ஒரு வருடத்தில் விவாகரத்து நடைபெற்றது. சினிமாவில் நடிக்கும்போது சுகன்யா மீது சந்தேகப்பட்டிருந்தாலும் பரவாயில்லை. 
 
ஆனால் சீரியலில் நடிக்கும்போது கணவர் சுகன்யாவை பார்த்து எக்குத்தப்பாக வார்த்தைகளை வீச உடனடியாக அரங்கேறியது விவாகரத்து. 
 
சுகன்யாவை திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்கக் கூடாது என கணவர் கட்டளை போட்டதாகவும், அதையும் மீறி அவர் சென்றதால் அவர் மீது கணவர்கள் வழக்கமாக படும் சந்தேகத்தை வைத்தாலும் இது நடைபெற்றதாம். 
 

விவாகரத்தாவது எளிமையாக நடந்ததா என்றால் இல்லை, நான் அமெரிக்காவில் தான் சுகன்யா-வை திருமணம் செய்தேன். எனவே, இந்தியாவின்ஹிந்து திருமண சட்டத்தின் படி விவகாரத்து கோரியுள்ள சுகன்யாவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் சுகன்யாவின் கணவர் ஸ்ரீதர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
அமெரிக்காவில் திருமணம் செய்திருந்தா, நியூஜெர்சியில் உள்ள ஒரு இந்து கோயிலில் தான்சுகன்யா திருமணம் செய்துள்ளார் என்று சுகன்யாவின் மனுவை ஏற்றுக்கொண்ட நீதி மன்றம் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது.
 
தற்போது 51 வயதாகும் சுகன்யா இன்னமும் தனிமையில் வசித்து வருகிறார். அந்த கசப்பான நிகழ்வுகளுக்கு பிறகு திருமணம் செய்து கொள்ளும் எண்ணமே அவருக்கு வரவில்லையாம்.

"திருமணம் நடந்த ஒரே வருடத்தில் விவாகரத்து.. - ஆனால்,..." - பலரும் அறிந்திடாத நடிகை சுகன்யாவின் மறுபக்கம்..! "திருமணம் நடந்த ஒரே வருடத்தில் விவாகரத்து.. - ஆனால்,..." - பலரும் அறிந்திடாத நடிகை சுகன்யாவின் மறுபக்கம்..! Reviewed by Tamizhakam on September 16, 2021 Rating: 5
Powered by Blogger.