பாலிவுட் செல்லும் நிவேதா பெத்துராஜ்..! - ரசிகர்கள் வாழ்த்து..!

 
'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். 
 
இப்படத்தைத் தொடர்ந்து, ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்', உதயநிதி ஸ்டாலினின் 'பொதுவாக என் மனசு தங்கம்', விஜய் ஆண்டனியின் 'திமிரு புடிச்சவன்' ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நிவேதா பெத்துராஜ்.
 
இதில், 'டிக் டிக் டிக்' படத்திற்கு மட்டுமே இவரது நடிப்புக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. போலீஸ் அதிகாரியாக அவர் நடித்த 'திமிரு புடிச்சவன்' படத்திற்கு அப்படி ஒன்றும் வரவேற்பு கிடைக்கவில்லை.
 
இதனால் தெலுங்கு பக்கம் ஒதுங்கிய நிவேதா பெத்துராஜ் அங்கே தீவிர படவேட்டை நடத்திய நிலையில், சில தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
 
எப்படியாவது, தமிழில் முன்னணி ஹீரோயின் அந்தஸ்தை பெற வேண்டும் என்ற முடிவோடு இருக்கும் அவர், அடிக்கடி ஹாட் ஃபோட்டோ ஷுட் நடத்தி, கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வரும் நிலையில் தற்போது பாலிவுட் படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளாராம் அம்மணி. 

பாலிவுட் செல்லும் நிவேதா பெத்துராஜ்..! - ரசிகர்கள் வாழ்த்து..! பாலிவுட் செல்லும் நிவேதா பெத்துராஜ்..! - ரசிகர்கள் வாழ்த்து..! Reviewed by Tamizhakam on September 21, 2021 Rating: 5
Powered by Blogger.