நீங்களா இது...? - ஸ்ருதிஹாசனின் முதல் போட்டோஷூட் புகைப்படங்கள்..! - குழம்பி போன ரசிகர்கள்..!

 
சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர். 
 
அவ்வாறு பதிவு செய்யப்படும் புகைப்படங்களை காணும் ரசிகர்கள்., சில நேரத்தில் அந்த புகைப்படத்தை பார்த்து வர்ணிப்பதும்., சில ரசிகர்கள் உங்களுக்கு வேற வேலையே இல்லையா? என்று கடுமையான கேள்விகளை எழுப்பி கழுவி ஊற்றுவதும் பின் யாருக்கும் தெரியாமல் அதை டவுன்லோட் செய்வதும் இணையத்தளத்தில் நடக்கும் கூத்துகளில் ஒன்றாக மாறிவிட்டது.
 
சினிமாவில் அறிமுகமானது இசையமைப்பாளராக, அதன்பின் நடிகையாக கொடிகட்டி பறந்தவர் ஸ்ருதிஹாசன். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் படங்கள் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களாக இருக்கும் விஜய், அஜித், சூர்யா ஆகியோருடன் நடித்திருக்கிறார். 
 
ஊர் உலகத்தில் எவ்வளவு கவர்ச்சி நடிகைகள், எவ்வளவு கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்தாலும் ஸ்ருதிஹாசன் வெளியிடும் ஹாட்டான புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஜாஸ்தி.சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘கிராக்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டடித்து வருகிறது.
 
 
நடிகர் கமல்ஹாசனின் வாரிசு ஸ்ருதிஹாசன். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிரபலமாக இருக்கும் ஸ்ருதிஹாசன், தமிழ் தவிர மற்ற இரண்டு மொழிகளிலும் நடிப்புடன் கூடிய கவர்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார். படங்களில் மட்டுமல்லாது சில ஆங்கில இதழ்களின் அட்டை பக்கத்தில் கவர்ச்சியாகவும் போஸ் கொடுக்கிறார். 
 
 
சமீபத்தில் கூட ஒரு ஆங்கில இதழின் அட்டை பக்கத்தில் ஸ்ருதியின் கவர்ச்சி படங்கள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், இதுப்பற்றி அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது... ''நடிகைகள் கவர்ச்சியை மட்டும் நம்பி சினிமாவில் நீடிக்க முடியாது. 
 
 
கவர்ச்சியுடன் கூடிய திறமையும் வேண்டும். நான் கவர்ச்சியாக இருக்கிறேன், அதனால் எல்லோருக்கும் கவர்ச்சியாக தெரிகிறேன். புதுமையாக யோசிப்பது கூட கவர்ச்சி தான். கவர்ச்சியில் ஒரு எல்லை வைத்திருக்கிறேன், அதை கண்டிப்பாக மீற மாட்டேன், ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப முக்கியத்துவம் கொடுப்பேன் என்று ககூறினார். 
 

இந்நிலையில், தன்னுடைய 17 வயதில் எடுத்துக்கொண்ட தனது முதல் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், நீங்களா இது...? கேப்ஷனை பார்த்த அப்புறம் தான் நீங்கன்னே எங்களுக்கு தெரிஞ்சது.. என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

நீங்களா இது...? - ஸ்ருதிஹாசனின் முதல் போட்டோஷூட் புகைப்படங்கள்..! - குழம்பி போன ரசிகர்கள்..! நீங்களா இது...? - ஸ்ருதிஹாசனின் முதல் போட்டோஷூட் புகைப்படங்கள்..! - குழம்பி போன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on September 05, 2021 Rating: 5
Powered by Blogger.