இயக்குனர் சுந்தர் சி இயக்கிய திகில் தொடரான, 'நந்தினி' சீரியலில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் மாளவிகா வால்ஸ். ஒரு சில மலையாள படங்களில் நடித்திருந்தாலும், பெரிதாக கவனிக்கப்படாததால் சீரியல் நடிகையாக மாறினார்.
தற்போது மலையாளத்தில் முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் நடித்து வருகிறார். சுந்தர்.சி ஹீரோயின் என்றாலே அவர்களிடம் ஏதோ ஒன்று தனித்துவமாக இருக்கும்.
சமீபத்தில், ஒரு பேட்டியில் பேசிய இவர், மலையாள சீரியல்களில் தொடர்ந்து நடிச்சுகிட்டு இருக்கேன். `நந்தினி'தான் என் முதல் தமிழ் சீரியல். பெரிய ஹிட்டான இந்த சீரியல், போன வாரம்தான் நிறைவடைந்தது. அதில், ஜானகி, சீதானு டூயல் ரோல்ல நடிச்சேன்.
பேயா நடிச்சது புதுமையா இருந்துச்சு; ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. ஆனா, என்னுடைய ரோல் இன்னும் கொஞ்ச காலம் டிராவல் பண்ற மாதிரி இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும். இந்த சீரியல் மூலம் நிறைய பயனுள்ள விஷயங்களைக் கத்துக்கிட்டேன்.
ஆனா, தமிழ் தெரியாம ரொம்பவே சிரமப்பட்டேன். இப்போ தமிழில் புது வாய்ப்புகள் வருது. சீக்கிரமே புது சீரியல்ல என்னைப் பார்க்கலாம். நடிப்பு தவிர, டான்ஸ்ல அதிக கவனம் செலுத்துறேன். மத்தபடி ஓய்வு நேரங்கள்ல குடும்பத்தினருடன்தான் அதிக நேரம் செலவிடுவேன்.
சமைக்கத் தெரியாது. ஆனா, நல்லா சாப்பிடுவேன். வேகவைத்த காய்கறிகள் மற்றும் பழங்கள்தான் அதிகம் சாப்பிடுவேன். வெளியூர் ஷூட்டிங் முடிஞ்சதும் உடனே கேரளாவுக்கு வந்திடுவேன்.
எங்க ஊர் பருவநிலை ரொம்பக் குளுமையா இருக்கும். இதுதான் என் அழகுக்குக் காரணம். அடுத்து சினிமாவுல நடிக்க ஆசைப்படறேன். அதுக்காக இன்னும் என் அழகுல அதிக அக்கறை காட்டுறேன்" என புன்னகைத்தபடி கூறியுள்ளார்.
இந்நிலையில், முட்டிக்கு மேல் ஏறிய கவுன் போன்ற உடையை அணிந்து கொண்டு தன்னுடைய வாழைத்தண்டு போன்ற தொடையை காட்டி ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.
0 கருத்துகள்