"என்ன கன்றாவிடா இது..?.." - இதுவரை இல்லாத கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை பவித்ரா..! முகம் சுழிக்கும் ரசிகர்கள்..!

 
விஜய் டிவியின் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் மூலம் மீண்டும் லீட் ரோலில் கலக்கி வருகிறார் பவித்ரா ஜனனி. சென்னையில் பிறந்த இவர் ஆல்பா ஆர்ட்ஸ் அண்ட்ஸ் சயின்ஸ் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். 
 
கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது “நீங்களும் ஆகலாம் விஜய் ஸ்டார்ஸ்” என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். நம்ப வீட்டு நட்சத்திரம் என்று ஒரு நிகழ்ச்சியை ஆங்கரிங் செய்தார். புதுயுகம் தொலைக்காட்சியில் உணவு மற்றும் அழகு சார்ந்த நிகழ்ச்சியையும் ஆங்கரிங் செய்திருக்கிறார். 
 
படிபடியாக தன்னை வளர்த்துக் கொண்டு விஜய் டிவியில் ஆஃபிஸ் சீரியலில் நடித்தார். மெல்ல மெல்ல வாய்ப்புகள் அவரைத் தேடி வர தொடங்கியது. ரியோ நடித்த சரவனன் மீனாட்சி தொடரில் பவித்ராவின் நடிப்பு பெரிதும் கவர்ந்திருந்தது. அதில் துளசி கேரக்டரில் அவர் நடித்திருந்தது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை கொடுத்தது.
 
 
கல்யாணம் முதல் காதல் வரை, பகல்நிலவு, மெல்ல திறந்தது கதவு, லட்சுமி வந்தாச்சு என தொடர்ந்து வாய்ப்பு கிடைத்த அத்தனை சீரியல்களிலும் கெஸ்ட் ரோலில் நடித்து வந்துள்ளார். வாழ்க்கையில் எது வந்தாலும் அதை சந்தித்துக்கொள்ளலாம் என எப்போதும் பாஸிட்டிவ் வாக யோசிப்பவர் பவித்ரா. சிறிய வேடமாக இருந்தாலும் தனக்கு தரப்படும் கேரக்டேரில் முழு ஈடுபாட்டுடன் நடித்து வந்துள்ளார். 
 
 
பிறகு ராஜா ராணி சீரியலில் நெகடிவ் ரோலில் நடிக்க வந்த வாய்ப்பையும் விடாமல் ஏற்றுக்கொண்டு அதிலும் தனது திறமையை காட்டியுள்ளார்.சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு ஈக்குவலாக சீரியல் நடிகைகளும் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். 
 
 
ப்ரியா பவானி ஷங்கர், வாணி போஜன் போன்றவர்கள் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை ஹீரோயின்கள் ஆனதே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது. வருடக்கணக்கில் சீரியலில் அழுது சம்பாதிக்கும் பணத்தை 20 நாள் கால்ஷீட்டில் அள்ளி விடலாம் என்ற ஆசையில் சீரியலில் இருந்து சினிமா நோக்கி படையெடுக்கும் கூட்டம் அதிகமாகி வருகின்றது. 


அந்த வகையில், தற்போது அடர் ஊதா நிறத்தில் லிப்ஸ்டிக், அடர் ஊதா நிறத்தில் கவர்ச்சி உடை என ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு கிளாமர் போஸ் கொடுத்து இணையத்தில் பதிவேற்றி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், என்ன கன்றாவி இது..? என்று கமெண்டி வருகிறார்கள்.

"என்ன கன்றாவிடா இது..?.." - இதுவரை இல்லாத கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை பவித்ரா..! முகம் சுழிக்கும் ரசிகர்கள்..! "என்ன கன்றாவிடா இது..?.." - இதுவரை இல்லாத கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை பவித்ரா..! முகம் சுழிக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on September 11, 2021 Rating: 5
Powered by Blogger.