"துள்ளி குதிக்கும் மொசக்குட்டி.." - குட்டியூண்டு ட்ரெஸ்ஸில் இணையத்தை அதிர வைக்கும் ராட்சசன் ரவீனா..!

 
நாம் ஒரு படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் சிறுமிகளை பல ஆண்டுகள் கழித்து நினைத்தாலும் அதேபோல் சிறுமியாகவே கற்பனை செய்து கொண்டிருப்போம். ஆனால் அவர்களோ மட, மடவென வளர்ந்து பெரிய பெண்ணாக மாறியிருப்பார்கள். 
 
அப்படி விஸ்வரூப வளர்ச்சியை அடைத்திருக்கிறார் ராட்சசன் படத்தில் பள்ளி மாணவியாக நடித்த ரவீனா தாஹா... "என்னை அறிந்தால்", "விஸ்வாசம்" ஆகிய படங்களில் தல அஜித்தின் மகளாக நடித்த அனிகா தற்போது போட்டோ ஷூட்டில் கலக்கி வருகிறார். 
 
மார்டன் டிரஸ், புடவை என அசத்தல் போட்டோக்களை வெளியிட்டு வரும் அனிகாவிற்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அவரை ஓரம் கட்டுவதற்காக தற்போது மற்றொரு குழந்தை நட்சத்திரமான ரவீனா தாஹா களமிறங்கியுள்ளார். 
 
ராட்சசன் படத்தில் அனைவரையும் கவர்ந்த முதல் கதாபாத்திரம் விஷ்ணு விஷாலின் அக்கா மகளாக வரும் அம்மு அபிராமி, அவரை அடுத்து ஒரிரு சீன்களில் நடித்திருந்தாலும் படத்திற்கு முக்கியமான கேரக்டராக வலம் வந்தது அம்முவின் பள்ளி தோழியாக நடித்த ரவீனா தாஹா தான். 
 
 
ஆசிரியரால் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையை வசனமே இல்லாமல் பார்வையிலேயே மிரட்டியிருப்பார், பள்ளி மாணவியாக நடித்த ரவீனா தாஹா இதற்கு முன்னதாக ஜில்லா படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இப்படி நம் கண் முன்னே குழந்தையாக வலம் வந்த ரவீனா இப்போது குமரியாக மாறிவிட்டார். 
 
 
தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பூவே பூச்சுடவா தொடரில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி சின்னத்திரையில் பல டிவி ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார். எவ்வளவு நாளைக்கு தான் குழந்தை நட்சத்திர அந்தஸ்தில் இருப்பது, ஹீரோயினாக ஒரு ரவுண்ட் வர வேண்டாமா? என முடிவெடுத்த ரவீனா அதிரடியாக களத்தில் குதித்துள்ளார். 
 
 
புடவை, மார்டன் டிரஸ் பாவாடை தாவணி என சகட்டுமேனிக்கு போட்டோ ஷூட்களை நடத்தி பட வாய்ப்பு தேடி வருகிறார். டிக்-டாக்கிலும் பிரபலமாக வலம் வந்து கொண்டிருந்த ரவீனா சமீபத்தில் ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் நடத்தியுள்ள போட்டோ ஷூட் லைக்குகளை குவித்து வருகிறது.


தற்போது 18 வயதாகும் ரவீனா மார்டன் உடைகளிலும் விதவிதமாக போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். அழகில் பல மடங்கு மெருகேறியிருக்கும் ரவீனாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் லைக்குகளை வாரிக்குவிக்கிறது.

"துள்ளி குதிக்கும் மொசக்குட்டி.." - குட்டியூண்டு ட்ரெஸ்ஸில் இணையத்தை அதிர வைக்கும் ராட்சசன் ரவீனா..! "துள்ளி குதிக்கும் மொசக்குட்டி.." - குட்டியூண்டு ட்ரெஸ்ஸில் இணையத்தை அதிர வைக்கும் ராட்சசன் ரவீனா..! Reviewed by Tamizhakam on September 20, 2021 Rating: 5
Powered by Blogger.