இந்த மதுரை விஜய் ரசிகர்களுக்கு ஒரு கேடு வரமாட்டேங்குதே.. - புலம்பும் சக விஜய் ரசிகர்கள்..!

 
முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் 113 ஆவது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. திராவிட கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் உள்ளிட்டோர் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் மதுரையில் அண்ணாவின் உருவப்படத்தில் நடிகர் விஜய் முகத்தை சித்தரித்து சர்ச்சைக்குரிய வாசகங்களுடன் மாநகரம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. 
 
மதுரை தெற்கு மாவட்ட விஜய் ரசிகர் மன்ற உறுப்பினர் கரு.சுந்தரராஜன் ஒட்டியுள்ள அந்த போஸ்டரில், "நாட்டிற்காக உழைப்பதற்கே அண்ணா பிறந்தார். பொதுநலத்தில் தானே நாள் முழுக்க கண்ணாயிருந்தார். 
 
எங்கள் கடன் தீர மீண்டும் அண்ணா... தமிழர் நீங்கள் வேண்டும் அண்ணா..." என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. விஜயை அரசியலுக்கு இழுக்கும் நோக்கில் மதுரை ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். 
 
 
சமீபத்தில், அவரது பிறந்தநாளுக்கு அவரை வருங்கால முதலமைச்சர் போல கற்பிதம் செய்து ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்கள் வைரலாகின. இந்நிலையில், நேற்று (செப்டம்பர் 17) தி.க இயக்கத்தின் முன்னோடியான ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் பிறந்தநாள் அவரை பின்தொடர்பவர்களால் கொண்டாடப்பட்டது. 
 
அந்த வகையில், தற்போது நடிகர் விஜய்யை ஈ.வெ.ராமசாமி நாயக்கரை போல சித்தரித்துள்ளனர். இதை கூட விட்டு விடலாம், இன்னும் ஒரு படி மேலே போய் அவரது மனைவி சங்கீதா அவர்களை ஈ.வெ.ராமசாமியின் முதல் மனைவியான மணியம்மை போல சித்தரித்து போஸ்டர் ஓட்டியுள்ளனர்.
 

இதனை பார்த்த ரசிகர்கள், இந்த மதுரை விஜய் ரசிகர்களுக்கு ஒரு கேடு வரமாட்டேங்குதே என்று புலம்பி வருகிறார்கள்.

இந்த மதுரை விஜய் ரசிகர்களுக்கு ஒரு கேடு வரமாட்டேங்குதே.. - புலம்பும் சக விஜய் ரசிகர்கள்..! இந்த மதுரை விஜய் ரசிகர்களுக்கு ஒரு கேடு வரமாட்டேங்குதே.. - புலம்பும் சக விஜய் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on September 18, 2021 Rating: 5
Powered by Blogger.