கர்நாடகா, பெல்காமைச் சேர்ந்த நடிகை ராய் லட்சுமி திரைத்துறையில் நடிகையாக அறிமுகமாவதற்கு முன்னர் மாடலாக புரு காபி, சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஃபேர் அண்ட் லவ்லி போன்ற சில விளம்பரங்களில் நடித்துள்ளார்.
அதன் மூலம் கிடைத்தது தான் ஹீரோயின் வாய்ப்பு. கற்க கசடற என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான ராய் லட்சுமி தாம் தூம் படத்தின் மூலம் பிரபலமான நடிகையாக வலம் வரத்துவங்கினார்.
தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்திருந்த போதிலும் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை. இருந்தும் முயற்சியை கைவிடாமல் இருந்து வரும் அவர் தற்போது சிண்ட்ரல்லா எனும் பேண்டஸி த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கருப்பு குதிரை மீது கவர்ச்சியாக அமர்ந்து கடிவாளத்தை பிடித்து இழுக்கும் புகைப்படமொன்றை இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள், எது குதிரைன்னே தெரியலையே... கொடுத்து வச்ச குதிரை.. கருப்பு குதிரை மேல வெள்ளை குதிரை.. என ஏகத்துக்கும் அம்மணியின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.