வர வர ஹீரோயின்ஸ் எல்லாம் சூட்டை கிளப்பும் வகையில் சில போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில், சில மாதங்களுக்கு முன், கிராமத்து பெண் போல பாவாடை தவானி அணிந்து சில புகைப்படங்களை வெளியிட்டு எல்லா இளைஞர்களின் மனதையும் சிதறடித்து இருந்தார் ராஷி கண்ணா .
ரொம்ப நாட்களாக தெலுங்கு நடிகர்கள் இவரை பொத்தி பொத்தி பாதுகாத்து வந்தனர். தமிழ் பக்கம் தலைகாட்டாமல் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் நடிக்க வந்தார். இதில் விஜய் சேதுபதி, அதர்வா, நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்திருந்தனர்.
தனுஷ், அடுத்து நடித்து வரும் படம் 'திருச்சிற்றம்பலம்'. ஏற்கனவே தனுஷின் யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன்', 'குட்டி' உள்ளிட்ட வெற்றிப்படங்களை கொடுத்த மித்ரன் ஜவஹர் இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு தனுஷுக்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர். அதன்படி நடிகைகள் நித்யா மேனன், ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர் ஆகிய மூவரும் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கின்றனர். இவர்களோடு முன்னணி இயக்குனர் பாரதிராஜா, நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.
இந்த படத்தின் படப்பூஜை நிகழ்ச்சி இம்மாத துவக்கத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளதாக படத்தின் கதாநாயகி ராஷி கண்ணா, தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதோடு படப்பிடிப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.