உச்சகட்டம்..! - சினிமாவுல கூட இப்படி பண்ணது இல்லையே..?? - TV நிகழ்ச்சியில் பூர்ணா செய்த வேலை..!


மலையாள சினிமாவில் பரபரப்பாக நடித்துக் கொண்டு முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா.எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை கச்சிதமாக செய்து முடிக்கும் சிறந்த நடிகையாக தென்னிந்தியாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை பூர்ணா.
 
எம்டன் மகன் வெற்றியைத் தொடர்ந்து பரத்,திருமுருகன் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்த திரைப்படம் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு. மலையாள சினிமாவில் பம்பரமாக சுற்றி மிக பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நடிகை பூர்ணா முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டார். 
 
முதல் படமே அவருக்கு வெற்றிப்படமாக அமைய அடுத்தடுத்த வாய்ப்புகள் வரத்தொடங்கின.அர்ஜுனன் காதலி,கொடைக்கானல், கந்தக் கோட்டை, துரோகி, ஆடுபுலி, வேலூர் மாவட்டம் என இவர் நடித்த திரைப்படங்கள் தொடர்ச்சியாக வெளியாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். மலையாளம் தமிழைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னட மொழியிலும் சில படங்களில் நடித்து அங்கும் பிரபலமானார். 
 
எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை கச்சிதமாக செய்து முடிக்கும் திறமை வாய்ந்த நடிகையாக இருந்தாலும் சரியான வாய்ப்புகள் அமையாததால் மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுக்க முடியாமல் இன்று வரை திணறி வருகிறார்.
 
இதனால், தொலைக்காட்சி நிகழ்சிகள், தெலுங்கில் இரண்டாம் கிரேடு படங்களில் நடித்து காலத்தை கடத்தி வருகிறார். அந்த வகையில், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக சென்றிருந்த அவர் போட்டியாளர் ஒருவரின் கன்னத்தை கடித்து பதம் பார்த்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. 
 

 
இதனை பார்த்த ரசிகர்கள், உங்களுக்கு என்ன வேலை..? நீங்க என்ன வேலை பண்ணிட்டு இருக்கீங்க..? என்று கலாய்த்து வருகிறார்கள்.

Advertisement

கருத்துரையிடுக

0 கருத்துகள்