3 மாதங்களுக்கு பிறகு எழுந்து நடக்கும் யாஷிகா..! - வீடியோவை பார்த்து மனமுறுகிய ரசிகர்கள்..!

 
நடிகை யாஷிகா ஆனந்த் 3 மாதங்களுக்கு பிறகு படுக்கையில் இருந்து எழுந்து நடக்கும் பயிற்சியை மேற்கொண்டுள்ளார். தமிழ் சினிமாவில் வளரும் இளம் நடிகையாக வலம் வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். 
 
தொடர்ந்து துருவங்கள் பதினாறு, பாடம், இருட்டு அறையில் முரட்டு குத்து, மணியார் குடும்பம், நோட்டா, கழுகு 2,ஸாம்பி மற்றும் மூக்குத்தி அம்மன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.இதில் மூக்குத்தி அம்மன் திரைப்படம் அவரது நடிப்பில் கடைசியாக வெளியானது. 
 
இதனை தொடர்ந்து இவன்தான் உத்தமன், ராஜ பீமா, கடமையை செய், பாம்பாட்டம், சல்ஃபர், பெஸ்டி ஆகிய படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார் யாஷிகா.இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 24ஆம் தேதி நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் விபத்துக்குள்ளானது. நடிகை யாஷிகா ஆனந்த் புதுச்சேரியில் இருந்து இரவு சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். 
 
இரவு 11 மணி வாக்கில் மகாபலிபுரம் அருகே வந்த போது யாஷிகா ஓட்டி வந்த கார் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. முதல் கட்ட சிகிச்சையை அரசு மருத்துவமனையில் பெற்ற யாஷிகாவும் அவருடைய நண்பர்களும் மேல் சிகிச்சைக்காக சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். 
 
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான காரை நடிகை யாஷிகாதான் ஓட்டி வந்தார் என்றும் தகவல்கள் வெளியாயின. இதனையத்து யாஷிகா மீது போலீஸார் இந்திய தண்டணைச் சட்டம் 279-337-304 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர். மேலும் விபத்தால் யாஷிகாவுக்கு பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. 
 
அவருக்கு பலமுறை அறுவைச் சிகிச்சைகள் நடைபெற்றன. அறுவைச் சிகிச்சைகளுக்குப் பிறகு மருத்துவமனையிலேயே சிச்சை பெற்று வந்தார் யாஷிகா. காயங்கள் ஆறிய நிலையில் அவருக்கு பிசியோதெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டுவந்தது. 
 
இதனையடுத்து நடப்பதற்கான பயிற்சியையும் தொடங்கி, யாஷிகா மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் மருத்துவமனையில் தனக்கு வழங்கப்பட்டு வரும் நடைப் பயிற்சி வீடியோவை, அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை யாஷிகா வெளியிட்டுள்ளார். 
 
அந்த வீடியோவில் இரு பக்கமும் சப்போர்ட்டிங் உபகரண உதவியுடன் யாஷிகா நடக்க மேற்கொள்ளும் பயிற்சி இடம் பெற்றுள்ளது. விபத்து நடந்த அடுத்த சில நாட்களில், அதுகுறித்து இன்ஸ்டாகிராமில் விளக்கம் அளித்து தன்னுடைய நிலையை யாஷியா ஆனந்த் விளக்கியிருந்தார். 
 

 
இந்நிலையில் 3 மாதங்கள் கழித்து தற்போது நடிகை யாஷிகா தரப்பில் முதன் முறையாக வீடியோ நடைப் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது.